20 ஓவர் உலகக்கோப்பையில் அஸ்வின் விளையாடுவாரா?

20 ஓவர் உலக்கோப்பையில் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைப்பது கேள்விக்குறி என இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்தீவ் படேல் தெரிவித்துள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 31, 2022, 04:04 PM IST
  • 20 ஓவர் உலகக்கோப்பை போட்டி
  • அஸ்வின் இந்திய அணியில் இடம்பெறுவாரா?
  • பார்த்திவ் படேல் தெரிவித்திருக்கும் கருத்து
20 ஓவர் உலகக்கோப்பையில் அஸ்வின் விளையாடுவாரா?  title=

20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், கடந்த 7 மாதங்களாக அஸ்வின் இந்திய அணியில் விளையாடவில்லை. நியூசிலாந்து தொடருக்குப் பிறகு அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இருப்பினும், தற்போது வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணத்தில் அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியில் களமிறங்கிய அவர், 2 முக்கியமான விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அவருடைய இந்த ஆட்டம் கவனத்தை பெற்றிருக்கும் நிலையில், எதிர்வரும் 20 ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

மேலும் படிக்க | முதல் முறையாக இந்திய அணியில் கிடைத்த வாய்ப்பு! மகிழ்ச்சியில் ஐபிஎல் வீரர்!

சர்வதேச போட்டியில் அஸ்வினின் ரெக்கார்டு சூப்பராக இருக்கும்போதும், அவருக்கான வாய்ப்பு என்பது கடினமாகவே இருக்கிறது. இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் பார்தீவ் படேல் பேசும்போது, 20 ஓவர் இந்திய அணியில் அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுப்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அவருக்கு மாற்றாக ரவி பிஸ்னோயை, இரண்டாவது போட்டியில் இந்திய அணி தேர்வு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். விரிஸ்ட் ஸ்பின்னர்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதால், அவர்களை தேர்வு செய்வதே சிறந்த முடிவாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து பார்த்தீவ் படேல் பேசும்போது, " 3 ஸ்பின்னர்களுடன் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி களமிறங்க வேண்டிய அவசியமில்லை. யுஸ்வேந்திர சாஹலுடன் ரவி பிஸ்னோய் களமிறக்கலாம். அஸ்வின் மற்றும் ஜடேஜா காம்போ சிறப்பாக செயல்பட்டாலும், அஸ்வினின் பந்துவீச்சில் எந்த மாற்றமும் இருப்பதாக தெரியவில்லை. ஒரே மாதிரியான அணுகுமுறை அவரிடம் இருக்கிறது. அதேநேரத்தில் ரன்களை கட்டுப்படுத்துவதிலும், விக்கெட்டுகளை எடுப்பதிலும் விரிஸ்ட் ஸ்பின்னர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். உலகக்கோப்பை போட்டிகள் விரைவில் வர இருப்பதால், அதற்கு ஏற்ப வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். குல்தீப் யாதவைகூட தேர்வு செய்யலாம் என்றும் பார்த்தீவ் படேல் கூறியுள்ளார்.

மேலும் படிக்க | ’என்னோட இலக்கு இதுதான்’ அஸ்வினுடன் மனம்திறந்து பேசிய தினேஷ் கார்த்திக்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News