முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 224/3 ரன்கள் குவிப்பு!
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் 3 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் குவித்துள்ளது.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் 3 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று ரான்சி மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. துவக்க ஆட்டக்காரராய் களமிறங்கிய மயங்க் அகர்வால் 10(19) ரன்களில் வெளியேறி ரசிகர்களை ஏமாற்ற., மறுபுறம் ரோகித் ஷர்மா அதிரடியாக விளையாடி 117*(164) ரன்கள் குவித்தார். இவருக்கு துணையாக ரஹானே நிதானமாக விளையாடி 83(135) ரன்கள் குவித்தார். என்ற போதிலும் ஆட்டத்தின் 58-வது ஓவர் முடிவில் மோசமான வெளிச்சம் காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் வெளிச்சமின்மை காரணமாக முதல் நாள் ஆட்டம் நிறுத்திக்கொள்ளப்பட்டது.
ஆக முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் குவித்தது. புஜாரா மற்றும் கோலி முறையே 0(9), 12(22) ரன்களில் வெளியேறினர். தென்னாப்பிரிக்கா தரப்பில் காசிகோ ரபாடா 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதனையடுத்து இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரவுள்ளது. இதற்கு முன்னதாக நடைப்பெற்ற இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.