இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவி மிதாலி ராஜ், சர்வதே T20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2012 (இலங்கை), 2014 (பங்களாதேஷ்) மற்றும் 2016 (இந்தியா) ஆகிய 3 பெண்கள் T20 உலகக் கோப்பைகள் உட்பட 32 T20 போட்டிகளில் இந்தியாவை அணி தலைவியாக வழிநடத்தியவர், தற்போது சர்வதே T20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.


2006-ஆம் ஆண்டில் டெர்பியில் இந்தியா தனது முதல் பெண்கள் T20 சர்வதேச போட்டியில் விளையாடியபோது மிதாலி ராஜ் கேப்டனாக இருந்தார். 89 T20 சர்வதேச போட்டிகளில், மிதாலி இதுவரை 17 அரைசதங்கள் உட்பட 2364 ரன்கள் குவித்துள்ளார். இதில் 97*(நாட் அவுட்) அவரது சிறந்த வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது.



மிதாலி ராஜ் தனது கடைசி T20-னை இங்கிலாந்துக்கு எதிராக மார்ச் 9, 2019 அன்று விளையாடினார். இப்போட்டியில் 32 பந்துகளில் 30 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.


இது தொடர்பாக மிதாலி ராஜ் தெரிவிக்கையில்., "2006-ஆம் ஆண்டு முதல் T20 சர்வதேச போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியதில் பெருமை அடைகிறேன். 2021-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைக்கு என்னைத் தயார்படுத்துவதில் எனது ஆற்றலை மையப்படுத்த T20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற விரும்புகிறேன். எனது நாட்டிற்காக ஒரு உலகக் கோப்பையை வெல்வது எனது கனவாகவே உள்ளது, அதை நினைவாக்க விரும்புகிறேன். BCCI-ன் தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 


தென்னாப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான உள்நாட்டுத் தொடருக்கு தயாராகி வரும் இந்திய T20 அணிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்." என தெரிவித்துள்ளார்.