ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கான, இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சியை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜீன் 30-ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் இடையே உலகக்கோப்பை லீக் ஆட்டம் நடைபெற உள்ளது. அன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வழக்கமான ஜெர்சியுடன் விளையாட போவதில்லை, அதற்கு பதிலாக இந்திய அணி ஆரஞ்சு நிறம் பெரும்பாலும் கொண்ட ஜெர்ஸியுடன் களமிறங்கும். 


இந்தியா அணியின் ஜெர்சி அதிக அளவில் நீல நிறத்தை கொண்டதே. கிரிக்கெட் வர்ணனையாளர்கள் இந்திய அணி ஆடும் ஆட்டங்களில் இந்திய அணியை men in blue என்றே அழைத்து பார்த்திருப்போம். அந்த அளவு நீல நிறம் இந்திய அணியுடன் ஒன்றியதாக மாறி விட்டது என்றே கூறலாம். இந்திய அணியை போன்றே இங்கிலாந்து, இலங்கை, ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணி வீரர்கள் நீல நிற ஜெர்சியுடன் ஆடி வருகின்றனர்.



இந்நிலையில் ஐசிசியின் புதிய விதிமுறைப்படி போட்டியில் பங்கேற்கும் இரு அணிகளும் ஒரே நிற உடையில் களம் இறங்க கூடாது. அதனால் போட்டியை நடத்தும் நாடான இங்கிலாந்து ஜெர்சியில் எந்த மாற்றமும் செய்து கொள்ள தேவையில்லை. அதனால், ஜீன் 30-ஆம் தேதி இங்கிலாந்துடன் மோதும் ஆட்டத்தில் இந்திய அணி தங்களது ஜெர்சியை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. ஜீன் 30-ஆம் தேதி இங்கிலாந்து எதிரான ஆட்டத்தில் இந்திய அணி ஆரஞ்சு நிறம் பெரும்பாலும் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஜெர்ஸியுடன் களமிறங்கும். புதிதாக வடிவமைக்கப்பட்ட ஜெர்சியின் புகைப்படத்தை பிசிசிஐ தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.