மைதானத்தில் கோபமடைந்த விராட் கோலி! என்ன செய்தார் என்று பாருங்கள்!
India vs Bangladesh: 2வது டெஸ்டின் போது வங்கதேச வீரர்கள் விராட் கோலி ஆட்டமிழந்ததை ஆக்ரோஷமாக கொண்டாடியதால் கோலி கோபமடைந்தார்..
மிர்பூரில் பங்களாதேஷுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான சனிக்கிழமையன்று இந்தியா சற்று தடுமாற்றத்தில் இருந்தது. கேப்டன் ஷகிப் அல் ஹசன் மற்றும் இளம் மெஹிதி ஹசன் மிராஸ் போன்ற வங்காளதேச சுழற்பந்து வீச்சாளர்கள், 145 என்ற எளிய டார்கெட்டை அடிக்க விடமால் பவுலிங்கில் திணறடித்து வருகின்றனர். இரண்டாவது டெஸ்டில் மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்தனர். கேஎல் ராகுல் 2 ரன்களில் வெளியேறி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதே சமயம் சேதேஷ்வர் புஜாரா 6 ரன்களில் வெளியேறினார். ஷுப்மான் கில் 7 ரன்களில் அவுட் ஆகா 2வது டெஸ்ட் போட்டி பரபரப்பான நிலைக்கு சென்றது.
மேலும் படிக்க | 'நீ சட்டைய கழட்டு...' எதிரணி வீரரின் செயலால் கடுப்பான விராட் - என்ன நடந்தது?
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், 15 ஓவர்களுக்கு மேல் மீதமுள்ள நிலையில், நைட் வாட்ச்மேன் அக்சர் பட்டேலை பேட்டிங் செய்ய அனுப்பினார். ஆனால் மிராஸ்சின் சூழலில் கோலி ஆட்டமிழந்தார். இந்த ஆட்டமிழப்பை வங்கதேச வீரர்கள் வெகுவாக கொண்டாடினர், இதனை பார்த்த கோலி சிறிது கோபமடைந்தார். இது தொடர்பாக வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசனிடம் வார்த்தை போரில் ஈடுபட்டார்.
இந்திய அணி 145 ரன்களை சேஸ் செய்தால், இது இந்த மைதானத்தில் மூன்றாவது அதிக வெற்றிகரமான நான்காவது இன்னிங்ஸ் சேஸிங் ஆகும், ஏனெனில் முதல் மூன்று வெற்றி ஸ்கோர்கள் 209, 205 மற்றும் 103 ஆகும். நான்காம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், ஜெயந்த் யாதவ், அக்சார் படேல், பந்த் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்திய அணி இக்கட்டான நிலையில் உள்ளது.
மேலும் படிக்க | பென் ஸ்டோக்ஸ்ஸை எடுக்க சிஎஸ்கே! தோனி என்ன சொன்னார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ