இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது. கடந்த ஆண்டு இந்திய அணி சுற்றுப் பயணம் செய்திருந்தபோது, வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் ஏற்பட்டதால் கடைசி டெஸ்ட் போட்டி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அந்தப் போட்டி இன்று பிரிம்ஹாமில் நடைபெறுகிறது. பும்ரா தலைமையில் களமிறங்கும் இந்திய அணி, இப்போட்டியில் டிரா செய்தால்கூட வரலாறு படைத்துவிடும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | India vs England: சவால் விட்ட இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்!


5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2க்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. ஒருவேளை இப்போட்டியில் டிரா செய்தால் சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை படைக்கும். கடைசியாக 2007 ஆம் ஆண்டு ராகுல் டிராவிட் தலைமையில் இங்கிலாந்து சென்ற இந்திய அணி, அந்த அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்திருந்தது. அதன்பிறகு இப்போது அந்த வாய்ப்பு இந்திய அணிக்கு கிட்டியுள்ளது. 


பிரிம்ஹாம் எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் முதன்முறையாக டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ஏற்றிருக்கும் பும்ரா தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. கடந்த முறை நடைபெற்ற தொடரின்போது இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட் கேப்டனாக இருந்தார். இந்திய அணிக்கு விராட் கோலி கேப்டனாக இருந்தார். இந்த முறை கோலி ஒரு  வீரராக களமிறங்க இருக்கிறார். இங்கிலாந்து அணியில் பென்ஸ்டோக்ஸ் கேப்டனாக களமிறங்க இருக்கிறார். ஜோ ரூட் பிளேயராக விளையாடுகிறார். 


எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நிலவும் வானிலைப்படி, முதல் இரண்டு நாட்களுக்கு போட்டி மழையால் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. அடுத்த 3 நாட்கள் வெயில் அடிக்கும் என வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது. இந்தியா - இங்கிலாந்து மோதும் இந்த டெஸ்ட் போட்டியானது சோனி டென் 3 மற்றும் 4 ஆகிய சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட இருக்கின்றன. 


மேலும் படிக்க | இந்திய டெஸ்ட் அணியில் களமிறங்கப்போகும் ஆர்சிபி வீரர்! கேப்டன் பும்ரா முடிவு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR