இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற 5 போட்டிகள் தொடர் பாதியில் முடித்துக் கொண்டதையடுத்து, இந்திய அணி இந்த ஆண்டு இங்கிலாந்துக்கு சென்று எஞ்சியிருக்கும் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றும்.
இந்திய அணிக்கு வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக நியமிகப்பட்டுள்ளார். ரோகித் சர்மாவுக்கு கொரோனா பாசிடிவ் ஆனதையடுத்து, அவர் இந்த டெஸ்ட் போட்டியில் களமிறங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக இந்திய டெஸ்ட் அணிக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய கேப்டனால் அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | விராட் கோலியின் பார்ம் குறித்து பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் பேச்சு!
ஆர்சிபி வீரருக்கு வாய்ப்பு
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கேஎஸ் பாரத் களமிறங்கும் வாய்ப்புள்ளது. டெஸ்ட் அணியில் இடம் பிடித்திருக்கும் அவர், பயிற்சி ஆட்டத்தில் அரைசதம் அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இதனால், இந்த டெஸ்ட் போட்டியில் ரோகித்துக்கு பதிலாக பரத் களமிறக்கப்படலாம் என கூறப்படுகிறது. ஜஸ்பிரித் பும்ரா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அந்த முடிவில் தான் இருக்கிறார்கள். பார்மில் இருக்கும் பரத்தை வெளியில் உட்கார வைக்க இருவரும் விரும்பவில்லை.
ஐபிஎல் போட்டி அனுபவம்
ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்காக கேஎஸ் பாரத் ஓபனிங் இறங்கியுள்ளார். இதனால் ஓபனிங் விளையாடுவதில் அவருக்கு பெரிய அனுபவம் இருக்கிறது. ஓப்பனிங் பேட்ஸ்மேன் இல்லாத குறை, பரத் பிளேயிங் லெவனில் இடம்பெறும்பட்சத்தில் முடிவுக்கெஉ வரும். கடந்த சில ஆண்டுகளாக பெங்களூரு அணிக்காக களமிறங்கிய அவர், இந்தமுறை டெல்லி அணியில் இருக்கிறார்.
மேலும் படிக்க | அவுட் கொடுக்காத அம்பயருக்கு பாகிஸ்தான் பவுலர் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்
ரோஹித் - விராட் புறக்கணிப்பு
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இடம்பிடித்திருந்த பரத்துக்கு விராட் கோலி வாய்ப்பு கொடுக்கவில்லை. பேட்டிங் இறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், விருதிமான் சஹாவின் காயத்தால் கீப்பிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அப்போட்டியில் சிறப்பாக கீப்பிங் செய்ததால் அதிக கேட்சுகளை பிடித்த வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரானார். அடுத்து கேப்டனாக வந்த ரோகித்தும் வாய்ப்பு கொடுக்காத நிலையில், பும்ராவின் கீழ் வாய்ப்பு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR