இந்தியா Vs பாகிஸ்தான் - சாதனை படைத்த வேகப்பந்து வீச்சாளர்கள்
ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர்.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய ஆறு அணிகள் மோதும் 15ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் சில நாள்களுக்கு முன்பு தொடங்கியது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை நேற்று எதிர்கொண்டது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணிக்கு அந்த அணியின் கேப்டனான பாபர் அஸாம் மற்றும் ரிஸ்வான் ஆகியோர் தொடக்கம் தந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாபர், சோபிக்காமல் விரைவாகவே பெவிலியன் திரும்பினர்.
அவருக்கு பிறகு வந்த பாகிஸ்தான் வீரர்கள் பெரிய இன்னிங்ஸ் எதுவும் ஆடாததால் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் புவனேஷ் குமார் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்ததாக களமிறங்கிய இந்திய அணியும் மிடில் ஓவர்களில் தடுமாற ஹர்திக் பாண்டியா கடைசி ஓவரில் அணியை வெற்றி பெற செய்தார். இந்திய அணியில் விராட் கோலி 35 ரன்கள் எடுத்தார். ஆட்ட நாயகனாக பாண்டியா தேர்வு செய்யப்பட்டார்.
இதற்கிடையே, நேற்றைய போட்டியின்போது இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் புதிய சாதனையை படைத்துள்ளனர். அதாவது, இந்த ஆட்டத்தில் பாகிஸ்தானின் 10 விக்கெட்டுகளையும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களே வீழ்த்தினர். சுழற்பந்து வீச்சாளர் ஒரு விக்கெட்டும் எடுக்கவில்லை.
20 ஓவர் கிரிக்கெட்டில் ஓர் இன்னிங்ஸில் எதிரணியின் அனைத்து விக்கெட்டுகளையும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முழுமையாக வீழ்த்துவது இதுவே முதல்முறையாகும் இதற்கு முன் ஆகஸ்ட் 7-ந் தேதி நடந்த வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி-20 போட்டியில் அந்த அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் வீழ்த்தி சாதனை படைத்திருந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.
மேலும் படிக்க | எனது அணியில் தினேஷ் கார்த்திக்கு இடம் இல்லை - கம்பீரின் கருத்து
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ