ஆசியக் கோப்பை 2022 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குரூப் போட்டியில் முடிந்து தற்போது சூப்பர் 4 ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதில் இந்தியா பாகிஸ்தான் அணி மீண்டும் விளையாடியது. குரூப் ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்நிலையில் மீண்டும் பாகிஸ்தான் அணியை இந்தியா எதிர்கொள்ளும் இந்த போட்டியின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து ஜடேஜா விலகியிருந்த நிலையில் தீபக் ஹூடா அணியில் சேர்க்கப்பட்டிருந்தார்.  மேலும் தினேஷ் கார்த்திக்கு பதிலாக ரிஷப் பந்த் அணியில் இடம் பெற்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பில்டிங் தேர்வு செய்தது.  முதல் ஐந்து ஓவர்கள் இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ராகுல் மற்றும் ரோகித் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். பிறகு இருவரும் வெளியேற விராட் கோலி மற்றும் தனி ஆளாக போராடிக் கொண்டிருந்தார். சூரியகுமாரி யாதவ் 13 ரன்களுக்கும், ரிஷப் பந்த் 14 ரன்களுக்கும், ஹர்திக் பாண்டியா 0 ரன்களுக்கும் அவுட் ஆகி வெளியேறினர். இறுதியில் இந்திய அணி 181 ரன்கள் எடுத்திருந்தாலும் 20 முதல் 30 ரன்கள் குறைவாக இருந்தது தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.  ஏனெனில் முதல் 10 அவர்களின் 100 ரன்களை எட்டிய நிலையில் அடுத்த பத்து ஓவர்களில் பாகிஸ்தான அணி சிறப்பாக பந்து வீசி கோரை கட்டுப்படுத்தியது.  


 



மேலும் படிக்க | ஒரு தலைமுறையின் ஊக்கம் - கோலிக்கு ஹாங்காங் கொடுத்த பரிசு


சிறிது கடினமான இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணியில் முகமது ரிஸ்வான் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவினார்.  பாகிஸ்தானுக்கு எதிரான குரூப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு பவுலிங் முக்கிய காரணமாக இருந்தது. அடுத்தடுத்து முக்கியமான விக்கெட்களை கைப்பற்றினார். ஆனால் இந்த போட்டியில் அதனை இந்திய அணி செய்ய தவறவிட்டது.  ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சு இந்த போட்டியில் சுத்தமாக எடுபடவில்லை. அவரது ஓவர்களில் சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரி மழை பொழிந்தது.  


மேலும் சஹால் ரன்களை வாரி வழங்கியிருந்தார்.  முக்கியமான கட்டத்தில் ரவி பிஸ்னாய் வீசிய பந்து ரிஷப் பந்திடம் சென்றது. ஆசிப் அலியின் பேட்டில் பந்து பட்டதா? இல்லையா? என்ற குழப்பம் நீண்ட நேரம் நிலவியது. ஒருவேளை இது அவுட் ஆக இருக்கும் பட்சத்தில் போட்டியின் முடிவு மாறியிருக்கும்.  மேலும் அதற்கு அடுத்த பந்தில் அர்ஷ்தீப் சிங் சுலபமான ஒரு கேட்சை தவறவிட்டார். இதுவும் தோல்விக்கு காரணமாக அமைந்தது.  இந்த போட்டியில் ஒரு பந்து மீதம் இருக்க பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பலி தீர்த்தது.


 



மேலும் படிக்க | கே.எல். ராகுலை நீக்க சொல்கிறீர்களா?... பத்திரிகையாளரிடம் கேள்வி கேட்ட சூர்யகுமார் யாதவ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ