IND vs SA: 275 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனா தெ.ஆப்பிரிக்கா; இந்தியா 326 ரன்கள் முன்னிலை
3 ஆம் நாள் தேநீர் இடைவேளை வரை தென்னாப்பிரிக்கா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்துள்ளது.
16:26 12-10-2019
275 ரன்களுக்கு தென்னாப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதன்மூலம் இந்திய அணி 326 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக கேசவ் மகாராஜ் 72 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதற்கு அடுத்த படியாக அணியின் கேப்டன் டு பிளெசிஸ் 64(117) ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
இந்திய அணி சார்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் நான்கு விக்கெட்டும், உமேஷ் யாதவ் மூன்று விக்கெட்டும், ஷமி இரண்டு விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
16:11 12-10-2019
தென்னாப்பிரிக்கா அணிக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆடி வந்த கேசவ் மகாராஜ் 72 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இன்னும் ஒரு விக்கெட் மட்டும் எஞ்சி உள்ளது. 102 ஓவர் முடிவில் தென்னாப்பிரிக்கா 9 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்துள்ளது.
15:46 12-10-2019
இன்னும் 10 ஓவர் தான் மீதமிருக்கு. அனைத்து விக்கெட்டையும் கைப்பற்றுமா? இந்திய அணி. எட்டு விக்கெட் இழந்த பிறகும் நிதானமாக, நிலைத்து நின்று ஆடும் தென்னாப்பிரிக்காவின் வெர்னான் பிலாண்டர்* 38(160) மற்றும் கேசவ் மகாராஜ்* 58(110). கேசவ் மகாராஜ் தனது முதல் சர்வதேச அரைசதத்தை டெஸ்ட் போட்டியில் பூர்த்தி செய்துள்ளார்.
14:15 12-10-2019
77 ஓவர் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவை விட 404 ரன்கள் பின்தங்கியுள்ளது.
13:03 12-10-2019
இந்திய சுழல் பந்து வீச்சாளர் அஷ்வின் வீசிய 58.3 ஓவரில் நிதானமாக ஆடிய தென்னாப்பிரிக்கா கேப்டன் டு பிளெசிஸ் 64(117) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தற்போது தென்னாப்பிரிக்கா அணி 8 விக்கெட் இழபிற்கு 162 ரன்கள் எடுத்துள்ளது.
12:28 12-10-2019
44.2 ஓவரில் ஏழாவது விக்கெட்டை இழந்த தென்னாப்பிரிக்கா அணி. செனுரன் முத்துசாமி 7(20) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தற்போது தென்னாப்பிரிக்கா 48 ஓவர் முடிவில் 140 ரன்கள் எடுத்துள்ளது. ஃபாஃப் டு பிளெசிஸ்* 55(91) மற்றும் வெர்னான் பிலாண்டர்* 0(13) ரன்களுடன் ஆடி வருகின்றனர்.
புதுடெல்லி: புனேவில் நடைப்பெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின், 3 ஆம் நாள் உணவு இடைவேளை வரை தென்னாப்பிரிக்கா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவை விட 465 ரன்கள் பின்தங்கியுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பூனே மைதானத்தில் கடந்த 10 ஆம் தேதி தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. துவக்க வீரராக களமிறங்கிய மயங்க் அகர்வால் (108), சட்டேஷ்வர் புஜாரா (58) ஆகியோர் குறிப்பிடத்தக்க (138) ரன்கள் குவித்து சென்றனர். கேப்டன் விராட் கோலி ஆட்டமிழக்காமல் அரைசதம் அடித்தார். இதன் மூலம் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியாவை 273/3 என்ற கணக்கில் வலுவான நிலையில் இருந்தது. இதனையடுத்து இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை துவங்கிய இந்தியா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அணித்தலைவர் விராட் கோலி அபாரமாக ஆடி 254(336) ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவருக்கு துணையாக ரவிந்திர ஜடேஜா 91(104) ரன்கள் குவித்தார். இதனையடுத்து 5 விக்கெட் இழப்பிற்கு 601 ரன்கள் குவித்த நிலையில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸை டிக்ளர் செய்தது. தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் ககிசோ ரபாடா அபாரமாக பந்து வீசி இந்திய அணியின் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய தென்னாப்பிரிக்கா ஆரம்பம் முதலே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இரண்ட்டம் நாள் ஆட்ட நேர முடிவில் 15 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து 36 ரன்கள் மட்டுமே குவித்தது.
இன்று மூன்றாவது நாளாக தொடர்ந்து அடிய தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். உணவு இடைவேளை வரை ஆறு விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்த ஆடி வருகிறது தென்னாப்பிரிக்கா. ஃபாஃப் டு பிளெசிஸ்* 52(76) ரன்னுடன், செனுரன் முத்துசாமி* 6(12) ரன்னுடன் களத்தில் உள்ளனர்.
இந்திய அணியின் உமேஷ் யாதவ் அபாரமாக பந்து வீசி 3 விக்கெட் வீழ்த்தியுள்ளார். முகமது ஷமி 2 விக்கெட்டும், அஷ்வின் ஒரு விக்கெட்டும் எடுத்துள்ளனர்.