இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி, பல்லெகலே சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது. 


இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் நடந்த டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது. 


அடுத்து இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் மோதுகின்றன. தம்புல்லாவில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்று முன்னிலை பெற்றது. 


இந்திய வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய இலங்கை அணி 43.2 ஓவரிலேயே 216 ரன்னுக்கு ஆல் அவுட்டாக, இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு மிக எளிதாக இலக்கை எட்டியது. 


ஐசிசி உலக கோப்பைக்கு நேரடியாகத் தகுதி பெறுவதற்கு இந்த தொடரில் 2 வெற்றி பெற வேண்டிய கட்டாயமும் அவர்களுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. வெற்றியை தொடர இந்தியாவும், கவுரவம் காக்க இலங்கையும் வரிந்துகட்டுவதால் இப்போட்டி விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கலாம்.


இந்தியா அணி:


விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் ஷர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், மணிஷ் பாண்டே, அஜிங்க்யா ரகானே, கேதார் ஜாதவ், எம்.எஸ்.டோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், யஜுவேந்திர சாஹல், ஜஸ்பிரித் பூம்ரா, புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாகூர்.


இலங்கை அணி:


உபுல் தரங்கா (கேப்டன்), ஏஞ்சலோ மேத்யூஸ், நிரோஷன் டிக்வெல்லா (விக்கெட் கீப்பர்), தனுஷ்கா குணதிலகா, குசால் மெண்டிஸ், சமரா கபுகேதரா, மிலிண்டா வர்தனா, மலிண்டா புஷ்பகுமாரா, அகிலா தனஞ்ஜெயா, லக்‌ஷன் சந்தகன், திசாரா பெரேரா, வனிண்டு ஹசரங்கா, லசித் மலிங்கா, துஷ்மந்த சமீரா, விஷ்வா பெரனாண்டோ.