2015ம் ஆண்டுகளுக்கு பிறகு வாய்ப்பு; முதல் பந்தில் சிக்ஸர் அடித்து அசத்தல்
2015 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல் முறையாக களம் இறங்கிய சஞ்சு சாம்சனுக்கு முதல் பந்தில் ஒரு சிக்ஸர் அடித்து அசத்தல்.
புது டெல்லி: இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நடைபெற்ற டி 20 தொடரின் கடைசி போட்டியில், 2015 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல் முறையாக, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனுக்கு (Sanju Samson) விளையாட வாய்ப்பு கிடைத்தது. களம் இறங்கிய சஞ்சு சாம்சன் முதல் பந்தில் ஒரு சிக்ஸர் (Six) அடித்தார். ஷிகர் தவான் 52 ரன்களுக்கு ஆட்டமிழந்ததை அடுத்து சாம்சன் பேட்டிங் செய்ய வந்தார். கேப்டன் விராட் கோலி அவரது இடத்தில் பேட்டிங் செய்ய அனுப்பினார். அதேபோல கடந்த போட்டியில் மூன்றாம் இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு விராட் கோலி வாய்ப்பு கொடுத்தார் என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டியது.
நீண்ட காலத்திற்குப் பிறகு மைதானத்தில் களம் இறங்கிய சாம்சன், லாங் ஆன் சைடில் பந்தை 6 ரன்களுக்கு அனுப்பினார். சஞ்சு சாம்சனின் சிக்ஸருக்குப் பிறகு கேப்டன் விராட் கோலியின் ரியாக்ட் கவனிக்கத்தக்கது. அவர் அதிர்ச்சி மற்றும் மகிழ்ச்சி அடைந்தார். முதல் பந்தில் ஒரு சிக்ஸர் அடித்த பிறகு, இரண்டாவது பந்தில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தார். வனிந்து ஹசரங்கா பந்தில் எல்.பி.டபிள்யூ (LBW) ஆனார்.
இது சாம்சனின் 2வது டி-20 போட்டியாகும். அவர் கடைசியாக இந்திய அணிக்காக 2015 இல் ஜிம்பாப்வேக்கு எதிரான டி 20 போட்டியில் விளையாடினார்.
நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இந்திய கிரிக்கெட் அணியின் விளையாடும் லெவன் வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால் அணியின் மற்றொரு விக்கெட் கீப்பரான ரிஷப் பந்துக்கு (Rishabh Pant) வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. புனேயில் இலங்கைக்கு எதிரான 3வது டி 20 போட்டியில் சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி டாஸை இழந்த பின்னர், முதலில் பேட்டிங் செய்ய அழைக்கப்பட்டதால், இந்திய கேப்டன் விராட் கோலி முந்தைய டி-20 போட்டியில் இருந்து அணியில் மூன்று மாற்றங்களை செய்தார். அதில் ஒன்று தான் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்துக்கு பதிலாக சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
அணியின் மாற்றம் குறித்து பேசிய விராட் கோலி, “நாங்கள் மூன்று மாற்றங்களைச் செய்துள்ளோம். ரிஷாப் பந்திற்கு பதிலாக சஞ்சு சாம்சன் வருகிறார். குல்தீப்பிற்கு பதிலாக சாஹல், சிவம் துபேவுக்கு பதிலாக மனிஷ் பாண்டே ஆடுவார்கள்” என்றார்.
இலங்கைக்கு எதிரான கடைசி போட்டியில் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.