இலங்கை அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயமணம் மேற்கொண்டுள்ளது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தியதை அடுத்து, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்க உள்ளது. டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையேற்ற நிலையில், ஓய்வில் இருந்த ரோஹித் சர்மா இத்தொடரை வழிநடத்த உள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும், விராட் கோலி, கேஎல் ராகுல், ஷமி உள்ளிட்டோர் அணிக்கு திரும்பியுள்ளனர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பும்ரா உடற்தகுதியை காரணம்காட்டி தொடரில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். இதனால், மீண்டும் இந்திய அணிக்கு பந்துவீச்சுக்கு மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 


இந்நிலையில், சிறப்பான பேட்டர்களுடனும், இளம் வேகப்பந்துவீச்சாளர்களுடனும், இரண்டு ஆல்-ரவுண்டர்களுடனும் இந்தியா களம் காணும். இதில், கே.எல். ராகுல் - இஷான் கிஷன் இடையே போட்டி இருக்கும். மேலும், அக்சர் படேல் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பாரா, அல்லது குல்தீப் / சஹாலுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம். அதேபோல, வேகப்பந்துவீச்சில் சீனியர் ஷமி, ஜூனியர் அர்ஷ்தீப் ஆகியோருக்கு கண்டிப்பாக இடம் இருக்கும் என்பதால் போட்டி உம்ரான் / சிராஜ் பக்கம்தான். இவர்களில் சிறந்த லைன்-அப்பை அமைப்பதே டிராவிட் - ரோஹித்தின் முதல் வேலையாக இருந்தது. 


மேலும் படிக்க | இனி இவர்களுக்கு இந்திய அணியில் இடம் இல்லை: ஓரம்கட்டிய பிசிசிஐ!



எங்கு, எப்போது பார்ப்பது?


அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தி ஏசிஏ மைதானத்தில் இப்போட்டி, இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. 1 மணிக்கு டாஸ் போடப்படும் நிலையில், 12.30 மணியில் இருந்தே போட்டியின் ஒளிபரப்பு தொடங்கிவிடும். இப்போட்டியை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களிலும், ஓடிடியில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆப்பில் ஒளிப்பரப்பாகும்.  


உத்தேச பிளேயிங் லெவன்


இந்தியா: ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யா்தவ், கேஎல் ராகுல் / இஷான் கிஷன், ஷ்ரேயஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ஷமி, அர்ஷ்தீப், உம்ரான் / சிராஜ்.  


இலங்கை: பதும் நிசங்கா, அவிஷ்க பெர்னாண்டோ, சரித் அசலங்கா, தசுன் ஷனகா (கேப்டன்), தனஞ்சய டி சில்வா, வனிந்து ஹசரங்கா, சாமிக்க கருணாரத்னே, குசல் மெண்டிஸ், மஹீஷ் தீக்ஷனா, டில்ஷான் மதுஷங்க, கசுன் ராஜித்.


மேலும் படிக்க | 20 ஓவர் கிரிக்கெட்டில் இப்போதைக்கு அந்த முடிவை எடுக்க மாட்டேன்; ரோகித் சர்மா\


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ