India vs Sri Lanka 1st ODI: கேப்டன் ரோஹித் ஷர்மா தலைமையில் 2022ல் இந்திய அணி முக்கிய தொடர்களில் தோல்வி அடைந்தது. காயத்தால் பாதிக்கப்பட்ட ரோஹித் சர்மா, அந்த ஆண்டு முழுவதும் இந்தியா விளையாடிய 68 ஆட்டங்களில் 39ல் மட்டுமே விளையாட முடிந்தது. ஆசிய கோப்பை, 2022 டி20 உலகக் கோப்பை என தோல்விகளை சந்தித்தது. வங்கதேசத்துடனான ஒருநாள் தொடரை 2-1 என இந்தியா இழந்த நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் கேப்டன் ரோஹித்க்கு விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. கடந்த வாரம் இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை தொடர்ந்து டெஸ்ட் தொடரில் இருந்தும் ரோஹித் நீக்கப்பட்டதால் துணை கேப்டன் கே.எல்.ராகுல் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
மேலும் படிக்க | சூர்யகுமார் யாதவ் ஏன் இத்தனை சாதனைகளை முறியடிக்கிறார் என்று தெரியுமா?
இப்போது, தசுன் ஷனகா தலைமையிலான இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் செவ்வாய்கிழமை (ஜனவரி 10) கவுகாத்தியில் தொடங்கவுள்ள நிலையில், ரோஹித் மீண்டும் அணிக்கு திரும்ப உள்ளார். ரோஹித் அணிக்கு திரும்புவதற்கு முன், அவர் போதுமான அளவு குணமடைந்துவிட்டார் என்பதை நிரூபிக்க உடற்தகுதி சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பையில் ரோஹித்தின் உடற்தகுதி குறித்து முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் சந்தேகம் எழுப்பினார்.
“ரோஹித் சர்மாவிடம் எந்தக் குறையும் இல்லை. அவரிடம் எல்லாமே உள்ளது ஆனால் தனிப்பட்ட முறையில் நான் நினைக்கிறேன், அவரது உடற்தகுதி குறித்து ஒரு பெரிய கேள்விக்குறி உள்ளது. அவர் போதுமான தகுதி உள்ளவரா? ஒரு கேப்டன் மற்ற வீரர்களை உடற்தகுதி பெற ஊக்குவிக்கும் ஒருவராக இருக்க வேண்டும், அணி வீரர்கள் தங்கள் கேப்டனைப் பற்றி பெருமிதம் கொள்ள வேண்டும். ரோஹித்தின் உடற்தகுதியில் பெரும் சந்தேகம் உள்ளது என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். அவர் கேப்டனாக ஆன பிறகு அவர் இவ்வளவு ரன்கள் எடுக்கவில்லை என்று நிறைய விமர்சனங்கள் உள்ளன, நான் அதை ஒப்புக்கொள்கிறேன், ஆனால் அவரது கிரிக்கெட் திறமையில் எந்த பிரச்சனையும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவர் மிகவும் வெற்றிகரமான கிரிக்கெட் வீரர். அவர் உடற்தகுதி பெற்றால், ஒட்டுமொத்த அணியும் அவரைச் சுற்றி அணி திரளும்” என்று கபில் தேவ் கூறி இருந்தார்.
கவுகாத்தியில் நடைபெறும் இந்தியா-இலங்கை ஒருநாள் போட்டியைக் கருத்தில் கொண்டு கம்ரூப் பெருநகர மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அரை நாள் விடுமுறையை அசாம் அரசு அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் பிற்பகல் 1 மணிக்கு மூடப்படும். "10/01/2023 அன்று பர்சபரா ஏசிஏ கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள இந்தியா-இலங்கை இடையேயான ஒருநாள் போட்டியையொட்டி கம்ரூப் (மெட்ரோ) மாவட்டத்தில் 2023 ஜனவரி 10ஆம் தேதி அரை நாள் உள்ளூர் விடுமுறை” என்று அரசு கூறி உள்ளது.
மேலும் படிக்க | சூர்யகுமாருக்காக பிசிசிஐக்கு தலைவலியை உண்டாக்கிய காம்பீர்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ