இந்தியா - மேற்கிந்திய அணிகளுக்கு இடையே நடைப்பெற்ற 4-வது ஒருநாள் போட்டியில் இந்தியா 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா மற்றும் மேற்கிந்திய அணிகள் மோதும் 5 ஒருநாள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது இந்தியாவில் நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் முதல் 3 போட்டிகள் முடிந்த நிலையில் இந்தியா, மேற்கிந்தியா அணி தலா ஒரு போட்டியில் வெற்றிப்பெற்று தொடரில் சமநிலையில் இருந்தது.



இந்நிலையில் இன்று மும்பை ப்ராபொர்ன் மைதானத்தில் 4-வது ஒருநாள் போட்டி நடைப்பெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. தொடக்க வீரராக களமிறங்கிய ரோகி ஷர்மா 162(137) அடிக்க, அவருக்கு துணையாக அம்பத்தி ராயுடு 100(81) எடுத்தார். இவர்கள் இருவரின் அதிரடி சதத்தால் இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்கள் குவித்தது. மேற்கிந்தியா தரப்பில் கெமர் ரோச் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


India vs Windies, 4th ODI - முழு விபரங்களுக்கு....


இதனையடுத்து 378 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்தியா களமிறங்கியது. ஆரம்பம் முதலே தடுமாற்றத்துடன் விளையாடி மேற்கிந்திய அணி தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுக்க அணித்தலைவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 54(70) ரன்கள் குவித்தார். இதர வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற ஆட்டதின் 36.2-வது பந்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த மேற்கிந்தியா 153 ரன்கள் மட்டுமே குவித்தது.


இந்திய அணி தரப்பில் கலீல் அஹமது, குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை குவித்தனர். இதனையடுத்து இந்தியா 224 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் 5 ஒருநாள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. ஆட்ட நாயகனாக 137 பந்துகளில் 162 ரன்கள் குவித்த ரோகித் ஷர்மா அறிவிக்கப்பட்டார்.