French Open பேட்மிண்டன் போட்டித்தொடரில் அரையிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் பிவி சிந்து
பிரெஞ்சு ஓபன் போட்டித்தொடரில் தாய்லாந்து பேட்மிண்டன் வீராங்கனையை வெற்றி கொண்டு அரையிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் பிவி சிந்து
தற்போது நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் தொடரில், இந்திய வீராங்கனை பிவி சிந்து, தாய்லாந்து பேட்மிண்டன் வீராங்கனை புசானன் ஒங்பாம்ருங்பான்-ஐ (Busanan Ongbamrungphan) நேர் செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
இந்தியாவின் ஒலிம்பிக் வீராங்கனை பி.வி. சிந்து, பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டியில், பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை, அக்டோபர் 29, 2021) தகுதி பெற்றார்.
காலிறுதியில் தாய்லாந்து வீராங்கனை ஓங்பாம்ருங்பானை 21-14, 21-14 என்ற செட் கணக்கில் வென்ற இந்திய வீராங்கனை சிந்து, அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
READ ALSO | ஆசிப் அலியின் அசத்தலில் பாகிஸ்தான் ஹாட்ரிக் வெற்றி!
ஆட்டத்தை சிறப்பாக தொடங்கிய சிந்து, தொடக்க ஆட்டத்தை 21-14 என்ற கணக்கில் கைப்பற்றினார். பட்டம் பெற்றுவிடும் முனைப்புடனும், நம்பிக்கையுடனும் களமிறங்கிய பி.வி சிந்து, 4-2 என்ற நிலையில் இரண்டாவது ஆட்டத்தை தொடங்கினார்.
சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த இந்திய வீராங்கனை, இரண்டாவது சுற்றை 21-14 என்ற நேர்செட்களில் வென்றார். மற்றொரு போட்டியில் காலிறுதியில் விளையாடிய லக்ஷ்யா சென் தோல்வியை சந்தித்தார்.
இரண்டாம் எண் கோர்டில் விளையாடிய லக்ஷ்யா, 15-21, 17-21 என்ற நேர் செட்களில் தென் கொரியாவின் ஹியோ குவாங்கியிடம் தோற்றார். வியாழன் அன்று, சமீர் வர்மா 21-16, 12-21 என்ற கணக்கில் முதல் சுற்றை வென்ற போதிலும், காயம் அடைந்ததால் போட்டியில் இருந்து வெளியேறினார்.
ALSO READ 1 பந்துக்கு 4 ரன்! திரில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR