Ratan Tata Latest Tamil : இந்திய தொழில்துறையின் ஜாம்பவான் ரத்தன் டாடா உடல் நலக்குறைவால் 86 வயதில் மும்பையில் காலமானார். அவரது மறைவுக்கு இந்தியாவில் இருக்கும் பல்வேறு துறையினரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் துறையைச் சேர்ந்த முன்னாள், இந்நாள் சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் பிளேயர்கள் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். எல்லா துறைகளிலும் கால் பதித்து உதவிகளை வாரி வழங்கியதைப் போல் கிரிக்கெட் பிளேயர்களுக்கும் ரத்தன் டாடா நிறைய உதவிகளை செய்து கொடுத்திருக்கிறார். வளர்ந்து வரும் இந்திய கிரிக்கெட் பிளேயர்களுக்கு தங்கள் நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பணி கொடுத்து அவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கி, அவர்கள் இன்னும் சிறப்பாக விளையாட ஊக்குவித்திருக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Ratan Tata Achievements | டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா செய்த சாதனைகள்!


டாடா குழுமத்துக்கு சொந்தமான ஃபாரோக் என்ஜினியர்ஸ், டாடா மோட்டார்ஸ், இந்தியா ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா போன்ற நிறுவனங்களில் இந்திய கிரிக்கெட் பிளேயர்கள் பணியாற்றிக் கொண்டே கிரிக்கெட் விளையாடி இருக்கின்றனர். அந்தவகையில், டாடா மோட்டார்ஸின் ஏர் இந்தியா நிறுவனத்தில் மொஹிந்தர் அமர்நாத், சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ராபின் உத்தப்பா, மற்றும் விவிஎஸ் லக்ஷ்மண் ஆகியோர் நல்ல சம்பளத்தில் பணியமர்த்தப்பட்டிருந்தனர். இந்தியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் ஜவஹல் ஸ்ரீநாத், ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் மற்றும் முகமது கைப் போன்ற பிளேயர்கள் நல்ல சம்பளத்தில் அவர்கள் விளையாடிக் கொண்டிருந்த காலத்திலேயே பணியமர்த்தப்பட்டிருந்தனர். 


லேட்டஸ்டாக என்று பார்த்தால் இந்திய கிரிக்கெட் பிளேயரான ஷர்துல் தாக்கூர் டாடா பவர் நிறுவனத்தில் பணியில் இருக்கிறார். ஜெயந்த் யாதவ் ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டிருக்கிறார். இவ்வாறு இன்னும் பல கிரிக்கெட் பிளேயர்களுக்கு டாடா குழுமத்திடம் இருந்து தொடர்ச்சியாக உதவி கிடைத்துக் கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் வழிவகை செய்த கொடுத்தவர் ரத்தன் டாடா. அதனால் அவரின் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் உலகமும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 


இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ச ச்சின் டெண்டுல்கர் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், ரத்தன் டாடா தன் வாழும்போது, மறைந்த பிறகும் இந்தியாவை முன்னெடுத்தே சென்றிருக்கிறார் என  புகழாரம் சூட்டியுள்ளார். அவருடன் நிறைய நேரம் செலவிட்டிருப்பதாகவும், இருப்பினும் அவரை சந்திக்க கூட முடியாத கோடிக்கணக்கானோர் இன்று அவரின் மறைவுக்கு படும் துக்கத்தில் நானும் பங்கெடுக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். அவரின் மறைவு இந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பு என்றும் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். டாடா நிறுவனத்தின் மூலம் தொண்டுகள் பல செய்து வாழ்க்கையில் மிகப்பெரிய மதிப்பை அவர் உருவாக்கிவிட்டு சென்றிருப்பதாகவும் அவர் இரங்கல் தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க | Tata Salt முதல் Tata Motors வரை: ரத்தன் டாடா எனும் சாம்ராஜ்யம்.. - இனி சாமானியனுக்காக யார் கனவு காண்பார்கள்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ