உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை அரையிறுதிப் போட்டி வரை வழிநடத்திய அணித்தலைவர் விராட் கோலிக்கு ICC-யின் ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ICC-யின் ஆடும் லெவன் அணியின் விவரத்தை ICC தனது அதிகாராப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த அணியில் விராட் கோலிக்கு பதிலாக இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 


ஜேசன் ராய் 7 போட்டிகளில் விளையாடி 63.29 சராசரி வைத்துள்ளார். ஆனால், விராட் கோலி 9 போட்டிகளில் விளையாடி 55.38 சராசரி மட்டுமே வைத்துள்ளார். சிறப்பாக விளையாடி வந்த இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்திடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று வெளியேறியது. இதன் மூலம் விமர்சிக்கப்பட்ட விராட் கோலியின் தலைமை போன்றவை, விராட் கோலியின் இடத்தை பறித்துள்ளது என கூறப்படுகிறது.


எனினும் இந்த கனவு அணியில், இரு இந்திய வீரர்கள் (ரோஹித் ஷர்மா மற்றும் பும்ரா) இடம்பெற்றுள்ளனர். உலகக் கோப்பை தொடரில் சிறந்த வீரர் என்ற பட்டம் பெற்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், அவர் ICC அணியில் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


முன்னாள் வர்ணனையாளர்கள் இயன் பிஷப், இயன் ஸ்மித் மற்றும் இஷா குஹா, கிரிக்கெட் எழுத்தாளர் லாவரென்ஸ் பூத் மற்றும் ஐசிசி மேலாளர் கிரிக்கெட் ஜியோஃப் அலார்டைஸ் ஆகியோர் இணைந்து ஐசிசி ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளனர்.


ரோஹித் ஷர்மா மற்றும் ஜேசன் ராய் இருவரும் தொடக்க வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நடப்பு தொடரில் ஐந்து சதங்கள் அடித்து, 648 ரன்களுடன் தொடரின் அதிக ரன் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றார் ரோஹித் ஷர்மா. வில்லியம்சன் மூன்றாவது இடத்திலும், அடுத்தடுத்த வீரர்களாக ஜோ ரூட், ஆல்-ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய அணியின் அலெக்ஸ் கேரே ஆடும் லெவனில் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.



பவுலிங் அணியில், மிட்செல் ஸ்டார்க், ஜோஃப்ரா ஆர்ச்சர், பெர்குசன் மற்றும் பும்ரா தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். இந்தத் தொடரில் 27 விக்கெட்டுகள் எடுத்து அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் ஸ்டார்க். 
நியூசிலாந்துக்கு எதிராக சூப்பர் ஓவர் வீசிய ஜோஃப்ரா ஆர்ச்சர் இந்தத் தொடரில் 20 விக்கெட்டுகள் வீழ்த்துயுள்ளார். பும்ரா, 18 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


--- அணி விவரம் ---


  • ஜேசன் ராய் (Eng) - 443 runs at 63.28

  • ரோகித் ஷர்மா (India) - 648 runs at 81.00

  • கேன் வில்லியம்சன் (c) (NZ) - 578 runs at 82.57 

  • ஜோ ரூட் (Eng) - 556 runs at 61.77

  • ஷகிப் (B'desh) - 606 runs at 86.57, 11 wkts at 36.27 

  • பென் ஸ்டோக்ஸ் (Eng) - 465 runs at 66.42, 7 wkts at 35.14

  • அலெக்ஸ் கேரி (wk) (Aus) - 375 runs at 62.50, 20 dismissals 

  • மிட்சல் ஸ்டார்ச் (Aus) - 27 wkts at 18.59

  • ஜொப்ரா ஆர்ச்சர் (Eng) - 20 wkts at 23.05

  • லுக்கி பெர்கிசன் (NZ) - 21 wickets at 19.47

  • ஜாஸ்பிரிட் பூம்ரா (India) - 18 wkts at 20.61