10-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் ஏப்ரல் 5-ம் தேதி தொடங்கி பல்வேறு நகரங்களில் நடைப்பெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர், வெளியூர் என்ற அடிப்படையில் தலா 2 முறை மோதின. மே 14-ம் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிந்தன.


ஐபிஎல் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப் போட்டி இன்று இரவு 8 மணிக்கு ஐதராபாத்தில் நடக்கிறது. 


இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் - ஸ்டீவன் சுமித் தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.


முன்னாள் சாம்பியனான மும்பை 3-வது முறையாக பட்டம் வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.


தனது முதல் ஆட்டத்தில் தோற்ற (புனேவுக்கு எதிராக) அந்த அணி அதன்பின் வெற்றியை குவித்து புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. ஆனால் லீக் ஆட்டத்தில் புனேவிடம் 2 முறையும், முதல் தகுதி சுற்றிலும் மும்பை தோற்றது.


இதற்கு தக்க பதிலடி கொடுத்து கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.


அந்த அணியில் பார்த்தீவ் பட்டேல், சிம்மனஸ், ரோகித் சர்மா, குணால் பாண்ட்யா, ஹர்த்திக் பாண்ட்யா, மிட்செல் ஜான்சன், கரண் சர்மா, பும்ப்ரா, மலிங்கா போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். பேட்டிங், பந்து வீச்சில் சம பலத்துடன் திகழ்கிறது.


கடந்த ஆண்டு அறிமுகமான புனே அணி அத்தொடரில் 7-வது இடத்தை பிடித்தது. இந்த ஆண்டு கேப்டன் பதவியில் இருந்து டோனிக்கு பதிலாக ஸ்டீவன் சுமித் நியமிக்கப்பட்டார்.


அந்த அணி இந்த ஆண்டு சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டியை எட்டி இருக்கிறது.


இத்தொடரில் மும்பையுடன் மோதிய 3 ஆட்டத்திலும் புனேயே வெற்றிவாகை சூடி இருக்கிறது. இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது.


புனே முதல் ஐ.பி.எல். கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. இரு அணிகளும் சமபலம் வாய்ந்ததனால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.