புது டெல்லி: 2020 ஆம் ஆண்டு நடக்க உள்ள ஐ.பி.எல். (IPL) தொடரில் விளையாடும் வீரர்களை ஏலம் எடுக்க 8 அணிகளின் உரிமையாளர்கள் நேற்று கொல்கத்தாவில் ஒன்றுகூடி இருந்தனர். தங்கள் அணியை வலுப்படுத்த தங்களுக்கு பிடித்த வீரர்களை ஏலம் எடுத்தனர். அதில் சிறப்பு என்னவென்றால், இந்தமுறை ஆஸ்திரேலியா வீரர் பாட் கம்மின்ஸ் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டு உள்ளார். அவர் ரூ. 15.5 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவ்வளவு பணத்தை கொடுத்து அவரை தன் பக்கம் இழுத்துக்கொண்டது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆஸ்திரேலியா வீரர் பாட் கம்மின்ஸ் ஏலம் எடுக்க ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே கடும் போட்டி நிலவியது. கடைசியாக கொல்கத்தா அணி அவரை ஏலம் எடுத்தது. இதுவரை நடைபெற்ற IPL வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக ரூ. 14. 5 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இங்கிலாந்து ஆல் ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் அந்த சாதனையை தக்க வைத்திருந்தார். 


முதல் 10 விலையுயர்ந்த வீரர்களின் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ், க்ளென் மேக்ஸ்வெல், நாதன் கூல்டர் நைல் மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோர் அடங்குவர். கம்மின்ஸை கொல்கத்தா வாங்கியது. மேக்ஸ்வெல் பஞ்சாப், மும்பை அணியில் கூல்டர் நைல் மற்றும் ஸ்டோனிஸுக்கு டெல்லி அணியில் இடம் கிடைத்துள்ளது.


இந்திய வீரர்களைப் பற்றி பேசுகையில், லெக் ஸ்பின்னர் பியூஷ் சாவ்லா மிகவும் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். அவரை சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வாங்கியது. அவரைத் தவிர, எந்த ஒரு இந்தியரும் 5 கோடியைக் கடக்க முடியவில்லை.


தென்னாப்பிரிக்காவின் கிறிஸ் மோரிஸ் ரூ .10 கோடிக்கு ஏலம் போனார். அவரை பெங்களூரு அணி வாங்கியது. இங்கிலாந்தைச் சேர்ந்த சாம் கரேன் 5.5 கோடிக்கும், ஈயோன் மோர்கனை கொல்கத்தா 5.25 கோடிக்கும் வாங்கியது.


இரண்டு மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் முதல் 10 இடங்களைப் பிடித்தனர். பந்து வீச்சாளர் ஷெல்டன் கேட்ரெல் ரூ .8.50 கோடியைப் பெற்றார். இவரை பஞ்சாப் வாங்கியது. ஷிம்ரான் ஹெட்மியர் டெல்லி அணிக்காக ரூ .7.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். 


கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த ஏலத்தில் 338 வீரர்களின் பெயர்கள் ஒவ்வொன்றாக அழைக்கப்பட்டன. ஆனால் 33 வீரர்கள் மட்டுமே ஏலம் எடுக்கப்பட்டனர். இந்த வீரர்களிடையே அதிக ஏலம் ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் மீது வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


அதபோல ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் அதிகவிலைக்கு ஏலம் போன வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர் யுவராஜ் சிங் ஆவார். ஆம் அவர் ரூ.16 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு உள்ளார். 


ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள்: 


யுவராஜ் சிங் ரூ. 16 கோடி
பாட் கம்மின்ஸ் ரூ. 15.5 கோடி
பென் ஸ்டோக்ஸ் ரூ. 14.5 கோடி
யுவராஜ் சிங் ரூ. 14.0 கோடி
தினேஷ் கார்த்திக் ரூ. 12.5 கோடி

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.