IPL 2020: COVID-டிலிருந்து குணமடைந்த CSK ஆட்டக்காரர் Ruturaj அணியுடன் பயிற்சியில் ஈடுபட்டார்!!
COVID-19 க்கு சாதகமாக சோதிக்கப்பட்ட இரண்டு வீரர்களில் ஒருவரான கெய்க்வாட் நீண்ட காலம் தனிமையில் இருக்க வேண்டியிருந்தது. அவர் கடந்த வாரம் இரண்டு சோதனைகளை மேற்கொண்டார். அவற்றின் முடிவுகள் நேர்மறையாக வந்ததால், அவர் மீண்டும் தனிமையில் இருந்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் COVID -19 இலிருந்து மீண்டு அணியின் பயிற்சியில் இணைந்துள்ளார். இந்த செய்தியை CSK Franchise தனது ட்விட்டர் பதிவு மூலம் வெளியிட்டது. பதிவில், கெய்க்வாட் pad-களை அணிந்து கொண்டு கையில் பேட்டுடன் இருப்பதைக் காண முடிகிறது. CSK ஞாயிற்றுக்கிழமை மாலை ஒரு பயிற்சி அமர்வை நடத்தியது.
COVID-19 க்கு சாதகமாக சோதிக்கப்பட்ட இரண்டு வீரர்களில் ஒருவரான ருதுராஜ் கெய்க்வாட் (Ruturaj Gaikwad) நீண்ட காலம் தனிமையில் இருக்க வேண்டியிருந்தது. அவர் கடந்த வாரம் இரண்டு சோதனைகளை மேற்கொண்டார். அவற்றின் முடிவுகள் நேர்மறையாக வந்ததால், அவர் மீண்டும் தனிமையில் இருந்தார். வாரத்தின் பிற்பகுதியில், அவரது COVID-19 சோதனை முடிவுகள் எதிர்மறையாக வந்தன. இரண்டாவது முறையாக அவரது முடிவுகள் எதிர்மறையாக வந்தவுடன் கெய்க்வாட் தனது அணியினருடன் பயிற்சியில் சேர அனுமதிக்கப்பட்டார்.
ALSO READ: IPL 2020: CSK வீரர் Ruturaj Gaikwad-க்கு மீண்டும் COVID, மீண்டும் quarantine!!
BCCI-யின் நெறிமுறைகளின்படி, அவர் உடற்பயிற்சி சோதனையிலும் தேர்ச்சி பெற்றதால், அவர் ஞாயிற்றுக்கிழமை பயிற்சி அமர்வில் பங்கேற்றார். CSK இன் ட்விட்டர் பதிவு உங்கள் பார்வைக்கு:
கெய்க்வாட் மற்றும் தீபக் சாஹர் தவிர, CSK –வின் 11 நபர்களின் சோதனை முடிவுகள் நேர்மறையாக வந்திருந்தன. அனைவரும் தற்போது குணமடைந்து விட்டனர். CSK-வின் முதல் ஆட்டத்தில் Playing XI-ல் சாஹரும் இருந்தார்.
சுரேஷ் ரெய்னாவின் மாற்றாக கருதப்படும் கெய்க்வாட், களத்தில் இறங்க காத்திருக்க நேரிடலாம். ஏனெனில், அந்த இடத்தில் ஆடிய ஃபாஃப் ட்யு ப்ளெசிஸ், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 58 ரன்கள் எடுத்து வெற்றிக்கு பெரும் உதவியாக இருந்தார்.
அடுத்த இரண்டு போட்டிகளில் முரளி விஜய் சரியாக ஆடாமல் போனால், அவருக்கு பதிலாக கெய்க்வாட் ஆடக்கூடும். விஜய், முதல் போட்டியில் ஏழு பந்துகளில் ஒரு ரன் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
28 T20 போட்டிகளில் 843 ரன்கள் எடுத்துள்ள கெய்க்வாட், மகாராஷ்டிரா மற்றும் இந்தியா ஏ ஆகியவற்றின் வழக்கமான தொடக்க ஆட்டக்காரர் ஆவார். IPL 2019 ஏலத்தில் ரூ .20 லட்சம் என்ற விலையில், அவர் CSK-வில் சேர்ந்தார்.
CSK தனது இரண்டாவது போட்டியில், செப்டம்பர் 22 ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajastan Royals) அணியை எதிர்கொள்கிறது. எம்.எஸ். தோனி தலைமையிலான CSK அணி கடந்த வாரம் பரம எதிரிகளான மும்பை இந்தியன்ஸை (Mumbai Indians) எதிர்த்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது IPL 2020 ஆட்டத்தைத் துவக்கியது.
ALSO READ: LIVE MI vs CSK: IPL 2020 தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்த தோனி படை