IPL 2020: ராஜஸ்தான் ராயல்ஸின் ஸ்டீவ் ஸ்மித்க்கு 12 லட்சம் ரூபாய் அபராதம்
IPL 2020 போட்டித்தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிவரும் ஸ்டீவ் ஸ்மித்க்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பந்து வீசிய ஸ்டீவ் ஸ்மித் குறிப்பிட்ட நேரத்தைவிட கூடுதல் நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டதாக கூறி இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியின் தோல்வியடைந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பட்டியலில் ஏழாவது இடத்திற்கு வந்துவிட்டது. இந்த நிலையில் ஸ்டீவ் ஸ்மித்திற்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் களம் கண்டன. முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 194 ரன்களை எடுத்தது. அந்த இலக்கை நோக்கி மட்டை வீச களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றுப் போனது. இதனிடையே இந்த போட்டியில் பந்து வீசுவதற்கு குறிப்பிட்ட நேரத்தைவிட கூடுதல் நேரம் எடுத்து கொண்டதாக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்திற்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக ஆர்சிபி கேப்டன் விராட் கோலிக்கும் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Read Also | IPL 2020: 57 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ்!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR