IPL 2020: ICC-ன் COVID-19 விதியை மீறிய ராபின் ஊத்தப்பா, Viral ஆகும் Video
ராபின் ஊத்தப்பாவின் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வரலானது. பலர் இதைப் பற்றி விவாதிக்கத் தொடங்கினர்.
துபாய்: கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு (KKR) எதிரான IPL 2020 போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) கிரிக்கெட் வீரர் ராபின் ஊத்தப்பா பந்தின் மீது உமிழ்நீரைத் தடவியுள்ளார். இது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) கொரானா வைரஸ் தொடர்பான விதிகளை மீறும் ஒரு செயலாகும். இது புதன்கிழமையன்று மூன்றாவது ஓவரின் 5 வது பந்திற்குப் பிறகு நடந்தது. ராபின் ஊத்தப்பா (Robin Uthappa) மிட் ஆன் பகுதியில், பந்தைப் பிடித்த பிறகு அதில் உமிழ்நீரைத் தடவியது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வரலானது. பலர் இதைப் பற்றி விவாதிக்கத் தொடங்கினர். இந்த சம்பவம் தொடர்பாக IPL இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. COVID-19 தொற்றுநோய் காரணமாக இந்த ஆண்டு ஜூன் மாதம் பந்தில் உமிழ்நீரைத் தடவ ICC தடை விதித்தது.
விளையாட்டின் நிலையான இயக்க நடைமுறையின்படி, "வீரர் பந்தில் உமிழ்நீரைப் பயன்படுத்தினால், நடுவர் முதலில் இந்த சூழ்நிலையைச் சமாளிப்பார். ஆனால் நிலை கட்டுக்கடங்காமல் போனால், இது குறித்து அந்த குறிப்பிட்ட அணி எச்சரிக்கப்படும்.”
ALSO READ: MS Dhoni-ன் சாதனையை முறியடித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை Alyssa Healy!!
ICC வழிகாட்டுதல்களின் படி, 'ஒவ்வொரு இன்னிங்ஸிலும் ஒரு அணிக்கு 2 முறை எச்சரிக்கை விடுக்க முடியும். ஆனால் பந்தில் உமிழ்நீரை அடிக்கடி பயன்படுத்தினால் 5 ரன்கள் அபராதம் விதிக்கப்படும். பந்தில் உமிழ்நீர் பயன்படுத்தப்படும் போதெல்லாம் நடுவர்கள் பந்தை சுத்தப்படுத்த வேண்டியிருக்கும்.”
கொரோனா காலத்தில் நடக்கும் போட்டி என்பதால், பல வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களுடன் IPL 2020 UAE-ல் நடந்து வருகிறது. இப்படிப்பட்ட நெருக்கடியான சமயத்தி, வீரர்கள், பொறுப்பாளர்கள் என அனைவரும் அனைத்து விதிமுறைகளையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியமாகும்.
இந்த போட்டியில், KKR-ன் 175 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய Rajasthan Royals 37 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
ALSO READ: IPL 2020: 37 ரன்கள் வித்தியாசத்தில் RR-யை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR