IPL 2021: அம்பத்தி ராயுடு தொடர்ந்து விளையாடுவாரா? விளக்கமளித்தார் CSK கோச் Fleming
ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே நடந்த சென்னை மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
IPL 2021 Update: IPL 2021 இரண்டாம் பாகத்தின் முதல் ஆட்டம் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே நடந்த இந்த போட்டியில் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் 88 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த பெற்ற தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட்டை பாராட்டினார். ருதுராஜ் கெய்க்வாட் 88 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எம்.எஸ். (MS Dhoni) தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்களை எடுத்தது. ஒரு நிலையில், 4 விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்திருந்த சென்னை அணி, பின்னர் சிறிது நிதானமாக விளையாடி, 156 ரன்களை எடுத்தது.
"ஆம், அது மிகவும் சிறப்பான ஆட்டம். சமீப காலங்களாக அணி அவரை கவனித்து வருகிறது. கடந்த முறையும் நாங்கள் இங்கு ஆடியபோது, கோவிட் -19 இலிருந்து அவர் அப்போதுதான் குணமடைந்திருந்தாலும், அவரை துரிதமாக ஆட வைத்தோம். அவருடைய திறமை மற்றும் அணி அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இது காட்டுகிறது. கடந்த ஆண்டு துபாயில் நடந்த ஐபிஎல் (IPL) போட்டியில் அவர் பங்களித்த விதம், இவ்வாண்டு போட்டிகளில் முதல் பாகத்தில் அவர் நன்றாக ஆட ஒரு முக்கிய காரணமாக இருந்தது. அவருடைய நேற்றைய ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது” என்று போட்டிக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் ஃப்ளெமிங் கூறினார்.
"அணி பிரச்சனையில் இருக்கும்போது, அவர் நின்று நிதானமாக விளையாடியது மிகவும் நல்ல விஷயம். மிகவும் இக்கட்டான சூழ்நிலையில், அவர் பொறுமையுடன் விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச்சென்றார்” என்று அவர் மேலும் கூறினார்.
ALSO READ: IPL 2021: ருத்ராஜின் ருத்ரதாண்டவத்தால் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி!
அம்பத்தி ராயுடு மற்றும் தீபக் சாஹர் ஆகியோரின் ஃபிடஸ் குறித்து கேட்கபட்டபோது, ஃப்ளெமிங், “ராயுடுவின் எக்ஸ்-ரே தெளிவாக இருந்தது. லேசான காயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. எலும்பு முறிந்திருக்குமோ என நாங்கள் அஞ்சினோம். ஆனால் அப்படி ஏதும் இல்லை. தீபக் சாஹருக்கு தசைப்பிடிப்பு இருந்தது. அதை பற்றியும் நாங்கள் கவனித்து வருகிறோம். இருவரும் விரைவில் குணமடைவார்கள் என எதிர்பார்க்கிறோம்” என்று கூறினார்.
அணியின் பேட்டிங் டெப்த் பற்றி பேசுகையில், ஃப்ளெமிங், "எட்டாவது இடத்தில் டுவைன் பிராவோ மற்றும் ஒன்பதாவது இடத்தில் ஷர்துல் தாக்கூர் இருப்பது அணிக்கு வலு சேர்க்கிறது. இது தற்செயலானதல்ல. இப்படிதான் நாங்கள் அணியை வடிவமைத்துள்ளோம். அணியின் கடைசி நிலை வரை பேட்ஸ்மேன்கள் இருப்பது அணிக்கு நல்லதுதான்” என்று தெரிவித்தார்.
நேற்றைய ஆட்டத்தில் டுவைன் பிராவோ மூன்று விக்கெட்டுகளையும், தீபக் சாஹர் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மும்பை இந்தியன்ஸ் அணியில் சவுரப் திவாரி 50 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ஐபிஎல் அட்டவணையில் முதலிடத்தை பிடித்துள்ளது. தோல்வியடைந்த மும்பை அணி, டாப் நான்கு இடங்கலிலிருந்து கீழே போகும் அபாயத்தில் உள்ளது. அடுத்தாக செப்டம்பர் 24 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை எதிர்த்து விளையாடும்.
ALSO READ:கேப்டன் பதவியிலிருந்து விலகிய கோலி; RCB ரசிகர்கள் அதிர்ச்சி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR