CSK vs MI: சென்னை தொடக்க வீரருக்கு காயம் அவர் விளையாடுவதில் சிக்கல்

IPL 2021: CSK தொடக்க வீரர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா? சென்னை அணியின் தலைமை நிர்வாக என்ன சொல்கிறார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 18, 2021, 02:19 PM IST
  • சிஎஸ்கே அணியின் அதிரடி நட்சத்திர வீரர் டூ பிளெஸ்ஸிக்கு இடுப்பில் காயம்.
  • துபாய் சென்ற சிஎஸ்கே வீரர் டூ பிளெஸ்ஸிஸ் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்.
  • அம்பதி ராயுடு அல்லது ராபின் உத்தப்பா தொடக்க வீரராக களம் இறங்கக்கூடும்.
CSK vs MI: சென்னை தொடக்க வீரருக்கு காயம் அவர் விளையாடுவதில் சிக்கல் title=

துபாய் சென்னை vs மும்பை : ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியன் பிரீமியர் லீக்கின் இரண்டாம் கட்ட ஆரம்பிக்க இன்னும் ஒரு நாள் இருக்கும் நிலையில், சிஎஸ்கே அணியின் அதிரடி நட்சத்திர வீரர் ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ் (Faf du Plessis) விளையாடுவது கேள்விக்குறி என தகவல்கள் கிடைத்துள்ளன. சமீபத்தில் நடந்த சிபிஎல் (Caribbean Premier League) போட்டியின் போது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டூ பிளெஸ்ஸிக்கு இடுப்பில் காயம் ஏற்பட்டது. மேலும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க துபாய் சென்ற சிஎஸ்கே வீரர் டூ பிளெஸ்ஸிஸ் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்.

சென்னை அணியின் முக்கிய வீரராக இவர் இருப்பதால், அனைவரின் கண்களும் அவரது உடற்தகுதி மீது உள்ளது. சிஎஸ்கே (CSK) தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ் குறித்து தகவலை வழங்கியுள்ளார். 

அதாவது அவர் போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பே இல்லை என்று சொல்லமுடியாது என்றாலும், போட்டிக்கு முன்பாக அவரின் காயத்தின் தன்மையை பொருத்து, அவரை விளையாட வைப்பதா? ஓய்வு அளிக்கப்படுமா? என்பது முடிவு செய்யப்படும் என்று விஸ்வநாதன் கூறினார். "நேற்று இரவு துபாய் வந்தடைந்த அவர் தனிமையில் இருக்கிறார். தனிமை காலம் முடிந்ததும், அவருடைய காயத்தை மதிப்பிடுவோம். அதன்பிறகு போட்டியில் பங்கேற்பது குறித்து முடிவு எடுக்கப்படும். ஆனால் இப்போது எதுவும் கவலைப்படத் தேவையில்லை என்று சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியதாக இன்சைட்ஸ் போர்ட் (Insidesport) தெரிவித்துள்ளது.

ALSO READ | IPL 2021: மீண்டும் ரசிகர்களுடன் களைகட்டவுள்ளது IPL, ஆனா ஒரு ட்விஸ்ட் இருக்கு

செயிண்ட் லூசியா கிங்ஸ் (Saint Lucia Kings) அணிக்காக விளையாடும் போது அவருக்கு இடுப்பில் காயம் ஏற்பட்டதால் சிபிஎல் 2021 இன் கடைசி மூன்று போட்டிகளில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில், சென்னை அணியின் மற்றொரு ஆட்டக்காரர் ராபின் உத்தப்பா அணிக்காக 3, 4வது வரிசையில் களம் இறங்கி நன்றாக விளையாடுவதால், அவரை தொடக்க வீரராக சென்னை அணி களம் இறங்கக்கூடும். டூ பிளெஸ்ஸிஸ் முழுமையாக குணமாகி வரும் வரை ராபின் உத்தப்பா தொடக்க வீரராக ஆடலாம். ஐபிஎல் தொடரில் தொடக்க வீரராக 2000 ரன்களுக்கு மேல் அடித்த உத்தப்பாவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் எனத் தெரிகிறது.

அதேபோல மற்றொரு வீரரான வலது கை பேட்ஸ்மேன் அம்பதி ராயுடுவையும் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்பு உள்ளது. டி-20 போட்டியில் தொடக்க வீரராக பேட்டிங் செய்வது அவருக்கு புதிதல்ல. ஏற்கனவே CSK அணிக்காக கடந்த காலத்தில் அவர் களம் இறங்கியுள்ளார். தேவைப்பட்டால் சென்னை அணியில் மீண்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். ஐபிஎல் தொடரில் தொடக்க வீரராக களம் இறங்கி ஒரு சதமும் அடித்துள்ளார்.

ALSO READ | IPL 2021: ரசிகர்களுக்கு அதிர்ச்சி, இந்த வீர்ரகள் IPL-லில் விளையாட மாட்டார்கள்!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News