IPL 2021, CSK vs MI: டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இடையில் நடந்த போட்டியில் மும்பை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை அணிக்கு ஆட்டத்தின் துவக்கத்திலேயே அடி விழுந்தது. அதிக நேரம் ஆடாமல் துவக்க ஆட்டக்காரர் ரிதுராஜ் விரைவிலேயே ஆட்டமிழந்தார். எனினும், அதற்குப் பிறகு ஆட வந்த மோயின் அலியும் ஃபாஃப் ட்யு ப்ளெசியும் அதிரடியாக ஆடி அணியை நல்ல நிலைக்கு கொண்டு வந்தனர்.


சுரேஷ் ரெய்னாவும் இன்று தன் வழக்கமான அதிரடி பாணியை வெளிப்படுத்தாமல் விரைவாகவே பெவிலியனுக்குத் திரும்பினார். எனினும், அம்பத்தி ராயுடு அபாரமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். முதல் இன்னிங்ஸ் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களை எடுத்தது. 


ALSO READ: IPL 2021: CSK vs MI: டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது


219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி துவக்கம் முதலே அதிரடியாக ஆடியது. அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா அதிக ரன்களை எடுக்காமல் ஆட்டமிழந்தாலும், கேரன் பொல்லார்ட் அசத்தலாக ஆடி கிடிகிடுவென மும்பையின் ஸ்கோரை உயர்த்தினார். 


கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், விறுவிறுப்பாகத் தொடங்கியது ஆட்டத்தின் 20 ஆவது ஓவர். மும்பை தரப்பில் போலார்டும் குல்கர்னியும் ஆட லுங்கி நிகிடி பந்து வீசினார். 19.4 ஓவரில் 211 ரன்களை எடுத்தது மும்பை அணி. கடைசி 2 பந்துகளில் 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பொல்லார்ட் சிக்ஸர் அடித்தார். இறுதியில் கடைசி பந்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.  


இன்றைய போட்டியுடன் சென்னை சூப்பர் கிங்கஸ் அணி ஏழு போட்டிகளில் 5 போட்டிகளில் வென்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி ஏழு போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 


IPL வரலாற்றிலேயே சென்ற ஆண்டுதான் சென்னை ப்ளே-ஆஃப்களுக்கு தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. IPL-லில் பங்கெடுக்கும் அணிகளில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக CSK இருந்துள்ளது. துவக்க ஆண்டு முதலே, தோற்கடிக்க மிகவும் கடினமான அணி என்ற பெருமையை பெற்றுள்ளது CSK அணி.


கடந்த ஆண்டு மிக மோசமாக ஆடிய CSK அணி, இந்த ஆண்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை முற்றிலுமாக பூர்த்தி செய்யும் என நம்பப்படுகின்றது. 


ALSO READ: Venkaboys: ராகுல் டிராவிட்டின் கோப அவதாரம், காரணம் இதுதான்…


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR