IPL 2021: ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய லீக் போட்டியில் மகேந்திரசிங் தோனி (MS Dhoni) தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் சென்னை அணி ஆதிக்கம் செலுத்தி 2வது வெற்றியை பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7:30 மணிக்குப் போட்டி துவங்கவுள்ளது. இரு அணிகளும் 23 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 14 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணி வெற்றி பெற்றுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் 13ஆவது சீசனில் ராஜஸ்தான் (Rajasthan Royals) அணி சிறப்பாக விளையாடி இரண்டு முறையும் சென்னையை வீழ்த்தியது. 


 IPL14வது சீசனின் இதுவரை 2 ஆட்டங்களில் விளையாடியுள்ள இரு அணிகளுமே தலா 1 வெற்றியை பெற்றுள்ளன. எனவே இரு அணிகளுமே அந்த உத்வேகத்துடன் இந்த ஆட்டத்தில் களம் காணும் என்பதில் சந்தேகம் இல்லை.


ALSO READ | எம்.எஸ் தோனிக்கு தடை விதிக்கப்படுமா? பதட்டத்தில் csk ரசிகர்கள்: முழு விவரம் உள்ளே


அணி விவரம்:


சென்னை சூப்பா் கிங்ஸ்: எம்.எஸ்.தோனி (MS Dhoni) (விக்கெட் கீபர், கேப்டன்), சுரேஷ் ரெய்னா, அம்பட்டி ராயுடு, கே.எம்.ஆசிஃப், தீபக் சாஹா், டுவைன் பிராவோ, ஃபா டூபிளெஸ்ஸிஸ், இம்ரான் தாஹிா், ஜெகதீசன், கரன் சா்மா, லுங்கி கிடி, மிட்செல் சேன்ட்னா், ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், ஷா்துல் தாக்குா், சாம் கரன், சாய் கிஷோா், மொயீன் அலி, கிருஷ்ணப்பா கௌதம், சேதேஷ்வா் புஜாரா, ஹரிசங்கா் ரெட்டி, பகத் வா்மா, ஹரி நிஷாந்த்.


ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன் (விக்கெட் கீபர், கேப்டன்), ஜோஸ் பட்லா், பென் ஸ்டோக்ஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், மனன் வோரா, அனுஜ் ராவத், ரியான் பராக், டேவிட் மில்லா், ராகுல் தெவாதியா, மஹிபால் லோம்ரோா், ஷ்ரேயஸ் கோபால், மயங்க் மாா்கண்டே, ஜோஃப்ரா ஆா்ச்சா், ஆன்ட்ரூ டை, ஜெயதேவ் உனத்கட், காா்திக் தியாகி, ஷிவம் துபே, கிறிஸ் மோரிஸ், முஸ்டாஃபிஸுா் ரஹ்மான், சேத்தன் சகாரியா, கே.சி.கரியப்பா, லியாம் லிவிங்ஸ்டன், குல்திப் யாதவ், ஆகாஷ் சிங்.


நேரடி ஒளிபரப்பு:
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) இடையிலான ஐபிஎல் 2021 போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் ஒளிபரப்பப்படும்.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR