IPL 2021: DC vs MI: மும்பை அணியை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது தில்லி அணி
நேற்றைய IPL போட்டியின் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி (Mumbai Indians), டெல்லி கேப்பிடல்ஸ் (Delhi Capitals) அணியை எதிர்கொண்டது.
IPL 2021, DC vs MI: நேற்றைய IPL போட்டியின் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி (Mumbai Indians), டெல்லி கேப்பிடல்ஸ் (Delhi Capitals) அணியை எதிர்கொண்டது.
சென்னை எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடக்கும் இப்போட்டிக்கான டாஸ் வென்று, முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்த மும்பை அணிக்கு, 20 ஓவர்களில் 137 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஆனாலும், மும்பை அணி, பந்து வீச்சில் சிறந்து விளங்குவதால், வெற்றி யார் பக்கமும் செல்லலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
ALSO READ | IPL 2021: DC vs MI, ஹாட்ரிக் வெற்றி பெறுமா மும்பை? டெல்லி - மும்பை மோதல்!
138 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடத்தொடங்கிய, தில்லி அணி, இறுதியில், 19.1 ஓவர்களிலேயே, 4 விக்கெட்டுகளை இழந்து, 138 ரன்கள் எடுத்து, 6 விக்கெட்டு வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றி கண்டது டெல்லி அணி.
டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் (Delhi Capitals) நல்ல ஃபார்மில் உள்ளது. இந்த சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் நன்றாக தன் திறமையைக் காட்டி வருகிறது.
மும்பை அணி IPL வரலாற்றில் தொடர்ந்து நல்ல முறையில் விளையாடி வரும் நிலையில். IPL 2021-ல் தனது முதல் ஆட்டத்தில் தோல்வியுற்ற மும்பை இந்தியன்ஸ் அணி (Mumbai Indians), அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றது. ஆனால், டெல்லி கேப்பிடல்சுக்கு எதிரான இந்த போட்டியிலும் மும்பை தோல்வி அடைந்ததை அடுத்து, அவர்கள் ஹாட்ரிக் வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்த்த, அதன் ரசிகர்களுக்கு, இந்த தோல்வி சிறிது ஏமாற்றமாக அமைந்துள்ளது எனலாம்.
மும்பை - டெல்லி அணிகள் ஐபிஎல் தொடரில் (IPL 2021) இதுவரை 29 ஆட்டங்களில் நேருக்கு நோ் மோதியுள்ளன. அதில் மும்பை 16 ஆட்டங்களிலும், டெல்லி 13 ஆட்டங்களிலும் வென்றுள்ளன.
ALSO READ | IPL 2021: DC vs MI: டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR