IPL 2021 Match 11: டெல்லி கேபிடல்ஸ் அணி, இந்த சீசன் ஐ.பி.எல்லில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஷிகர் தவானின் அருமையான ஆட்டம் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தோல்வியை உறுதி செய்தது.
மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் நடந்த இந்தியன் பிரீமியர் லீக்கின் 11 வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய டெல்லி அணி, வெற்றிப் பாதையில் அடி எடுத்து வைத்துவிட்டது.
கே.எல்.ராகுல்-மாயங்க் அகர்வால் ஜோடி அபாரமாக விளையாடி 122 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணிக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுத்தனர். இறுதியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 195 ரன்கள் எடுத்தது.
Also Read | சென்னையில் உணவகங்களில் இனி பார்சலுக்கு மட்டுமே அனுமதி
இருப்பினும், 10 ஓவர் வரையறையை கடந்து வந்தபோதும் ராகுல் தனது அதிரடி ஆட்டத்தைத் தொடங்கவில்லை. பூரன் எதிர்கொண்ட 8 பந்துகளில் ஒன்பது ரன்கள் மட்டுமே எடுத்தார்.
தீபக் ஹூடா மற்றும் ஷாருக்கானின் அபாரமான ஆட்டத்தால், முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கிய பஞ்சாப் கிங்ஸ் 195 ரன்கள் எடுத்தது.
அடுத்து களம் இறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் ஷிகர் தவான் மற்றும் பிருத்வி ஷா இருவருமே தொடக்கத்திலேயே சிக்ஸர்களாக அடித்து நொறுக்கினார்கள். 49 பந்துகளில்
ஷிகர் தவானின் அற்புதமான 92 ரன்கள் பஞ்சாப் கிங்ஸுக்கு பின்னடைவாக இருந்தது. நேற்றைய போட்டியின் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டவரும் அற்புதமாக ஆடிய ஷிகர் தவான் தான். 10 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் தங்கள் இலக்கை எளிதில் எட்டியது டெல்லி அணி.
Also Read | ICC T20 2021 உலகக் கோப்பைக்காக இந்தியாவில் 9 இடங்கள் தேர்வு
நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கே.எல். ராகுலின் பிறந்தநாள் ஆகும். போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த கே.எல்.ராகுல், "இன்று வெற்றி பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும், இப்போது சற்று ஏமாற்றமாக இருக்கிறது. ஆனால் எங்களுக்கு இன்னும் நிறைய போட்டிகளில் விளையாடவிருக்கிறோம். நாங்கள் வலுவாக திரும்பி அதிரடியாக களம் இறங்குவோம். இன்னும் 10-15 ரன்கள் எடுத்திருந்தால் வெற்றியடைந்திருக்க முடியும். ஆனால் 190க்கும் அதிகமான ரன்கள் மோசமானது இல்லை. "
"வாங்க்டே மைதானத்தில் இரண்டாவதாக பந்துவீச களம் இறங்குவது எப்போதுமே சவாலானது தான். இதுபோன்ற நிலைமைகளையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராகி வருகிறோம். நான் தோல்வியுற்ற பக்கத்தில் இருப்பதால் நான் அப்படிச் சொல்லவில்லை. பந்துவீச்சாளர்கள் எப்போதும் சிறப்பாக பந்து வீச முயற்சிக்கிறார்கள். ஆனால் ஈரமான களத்தில் அது கொஞ்சம் கடினமானது தான்" என்று பஞ்சாப் அணியின் கேப்டன் தெரிவித்தார்.
Also Read | IPL 2021, MI vs SRH: மும்பை இந்தியன் அணி, ஹைதராபாத் அணியை வெற்றி கண்டது
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR