IPL 2021, DC vs MI: இந்த IPL பதிப்பின் மிக முக்கியமான போட்டி இன்று நடக்கவுள்ளது. இன்று நடக்கவுள்ள லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
சென்னை எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடக்கும் இப்போட்டிக்கான டாஸ் சற்று முன்பு போடப்பட்டது. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
நீலங்களுக்கு இடையிலான போட்டி (Battle of Blues) என கிரிக்கெட் ரகிகர்கள் இந்த போட்டியை அழைத்து வருகின்றனர். ரோஹித் ஷர்மா (Rohit Sharma) தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி IPL-ன் மிகவும் சக்திவாய்ந்த அணிகளில் ஒன்றாகும். IPL-ன் ஆரம்ப கட்டங்களில் பின் தங்கிய நிலையில் இருந்த டெல்லி அணி கடந்த சில ஆண்டுகளில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
மும்பை அணி IPL வரலாற்றில் தொடர்ந்து நல்ல முறையில் விளையாடி வரும் ஒரு அணியாகும். IPL 2021-ல் தனது முதல் ஆட்டத்தில் தோல்வியுற்ற மும்பை இந்தியன்ஸ் அணி (Mumbai Indians), அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றது. டெல்லி கேப்பிடல்சுக்கு எதிரான இந்த போட்டியிலும் மும்பை வெற்றி பெற்றால், இது அவர்களது ஹாட்ரிக் வெற்றியாக இருக்கும்.
மறுபுரம், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் (Delhi Capitals) நல்ல ஃபார்மில் உள்ளது. அவர்களது அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான ஷிகா் தவன் அபாரமான ஃபார்மில் உள்ளார். இந்த சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் நன்றாக தன் திறமையைக் காட்டி வருகிறது.
ALSO READ: IPL 2021: DC vs MI, ஹாட்ரிக் வெற்றி பெறுமா மும்பை? டெல்லி - மும்பை மோதல்!
இன்று நடக்கும் போட்டி இரு அணிகளுக்குமே மிகவும் முக்கியமான போட்டியாகும். மும்பை அனியும் டெல்லி அணியும் IPL தொடரில் இதுவரை 28 ஆட்டங்களில் நேருக்கு நோ் மோதியுள்ளன. அதில் மும்பை 16 ஆட்டங்களிலும், டெல்லி 12 ஆட்டங்களிலும் வென்றுள்ளன.
மும்பை மற்றும் டெல்லி அணிகளின் விவரம் பின்வருமாறு:
மும்பை இந்தியன்ஸ்:
ரோஹித் சா்மா (கேப்டன்), ஆடம் மில்னே, ஆதித்யா தாரே, அன்மோல்பிரீத் சிங், அனுகுல் ராய், அா்ஜுன் டெண்டுல்கா், கிறிஸ் லின், தவல் குல்கா்னி, ஹார்திக் பாண்டியா, இஷான் கிஷண், ஜேம்ஸ் நீஷம், ஜஸ்பிரீத் பும்ரா, ஜெயந்த் யாதவ், கிரன் பொல்லார்ட், கிருணால் பாண்டியா, மார்க்கோ ஜென்சென், மோசின் கான், நேதன் கோல்டா்நீல், பியூஷ் சாவ்லா, குவின்டன் டி காக், ராகுல் சாஹா், சௌரவ் திவாரி, சூா்யகுமார் யாதவ், டிரென்ட் போல்ட், யுத்வீா் சிங்.
டெல்லி கேப்பிட்டல்ஸ்:
ரிஷப் பந்த் (கேப்டன்), ஷிகா் தவன், பிருத்வி ஷா, அஜிங்க்ய ரஹானே, ஷிம்ரன் ஹெட்மயா், மார்கஸ் ஸ்டாய்னிஸ், கிறிஸ் வோக்ஸ், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஸா் படேல், அமித் மிஸ்ரா, லலித் யாதவ், பிரவீண் துபே, ககிசோ ரபாடா, அன்ரிச் நா்ட்ஜே, இஷாந்த் சா்மா, அவேஷ் கான், ஸ்டீவ் ஸ்மித், உமேஷ் யாதவ், ரிபல் படேல், விஷ்ணு வினோத், லுக்மன் மேரிவாலா, எம்.சித்தார்த், டாம் கரன், சாம் பில்லிங்ஸ்.
ALSO READ: IPL 2021: ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி அபார வெற்றி
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான
செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR