CSK Captain MS Dhoni 12 லட்ச ரூபாய் அபராதம் செலுத்தும் காரணம் என்ன தெரியுமா?
மகேந்திர சிங் தோனிக்கு IPL முதல் போட்டியில் 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு இந்தியன் பிரீமியர் லீக்கின் 14வது பதிப்பு மோசமான தொடக்கத்தை கொடுத்திருக்கிறது. சனிக்கிழமை (ஏப்ரல் 11) ஐபிஎல் 2021 தொடக்க ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக அவரது அணி பெரும் தோல்வியை சந்தித்தது ஒரு பின்னடைவு என்றால், தோனிக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது மற்றுமொரு பின்னடைவாகியிருக்கிறது.
போட்டியின்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிதானமாக பந்து வீசியதற்காக தோனிக்கு (Mahendra Singh Dhoni) இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது நடத்தை விதிமுறை மீறல் என்று கூறப்படுவதால், தோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
ஏப்ரல் 10 ம் தேதி மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற விவோ இந்தியன் பிரீமியர் லீக் (VIVO Indian Premier League (IPL) போட்டியில் டெல்லி கேபிடஸ் அணிக்கு எதிராக விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச அதிக விகித குற்றங்கள் தொடர்பான ஐபிஎல் நடத்தை விதிகளின் (IPL’s Code of Conduct) கீழ், தோனிக்கு ரூ .12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது” என்று ஐ.பி.எல் குழுவின் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை கூறுகிறது.
Also Read | CSK vs DC: தில்லி கேபிடல்ஸ் அணி வெற்றி வாகை சூடியது
இது இந்த சீசனின் முதல் குற்றமாகும், இதனால் முன்னாள் இந்திய கேப்டன் அபராதத்துடன் விடுவிக்கப்பட்டார். ஆனால், அடுத்த போட்டியில் தவறு செய்தால் இடைநீக்கம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது.
கடுமையாக்கப்பட்ட புதிய ஐபிஎல் விதிகளின்படி, அணி ஒரு ஐபிஎல் இன்னிங்ஸை 90 நிமிடங்களில் முடிக்க வேண்டும், ஓவர் வீதம் மணிக்கு 14.1 ஓவர்களாக இருக்க வேண்டும்.
"போட்டியின் நேரத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாக, ஒவ்வொரு இன்னிங்ஸிலும் 20 ஓவருக்கு 90 நிமிடங்கள் என்று வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போட்டிகளில் ஒரு மணி நேரத்தில் குறைந்தபட்ச 14.11 ஓவர் விளையாட வேண்டியிருக்கும்” என்று பிசிசிஐ (BCCI) தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read | IPL 2021: தோனியின் இந்த பழைய தவறால் CSKக்கு இழப்பு?
இருப்பினும், தவறுக்கான அபராதத் தொகையில் மாறுதல் எதுவும் இல்லை. இதே தவறை மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி செய்தால் அப்போது 24 லட்சம் அபராதம் விதிக்கப்படும். எஞ்சிய அணி உறுப்பினர்களுக்கு 6 லட்சம் ரூபாய் அல்லது 25% போட்டி கட்டணம் அபராதம் (எது குறைவானதோ அது) விதிக்கப்படும். மூன்றாவது முறையாகவும் இதே தவறு தொடர்ந்தால் 30 லட்சம் ரூபாய் அபராதம், கேப்டனுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும். அது மட்டுமல்ல, அணியின் எஞ்சிய உறுப்பினர்கள் அனைவருக்கும் 12 லட்ச ரூபாய் அல்லது 50% போட்டிக் கட்டணம் அபராதம் (எது குறைவானதோ அது) விதிக்கப்படும்.
ஐபிஎல்லின் முதல் போட்டியில் தோனி ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார், ஆனால் அவரது அணி 188 ரன்கன் என்ற கடுமையான இலக்கை நிர்ணயித்தது. ஆனால், இலக்கை நோக்கி களம் இறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 18.4 ஓவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பிருத்வி ஷா மற்றும் ஷிகர் தவான் 13.3 ஓவர்கள் வரை விளையாடி, 138 ரன்கள் எடுத்து வெற்றியை அணிக்கு தேடித் தந்தனர்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR