IPL 2021 Final: இன்று மாலை நடக்கவுள்ள ஐபிஎல் 2021 இறுதிப் போட்டிக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இன்றைய இறுதிப்போட்டியில் எம்எஸ் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் இயோன் மோர்கனின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன. போட்டிக்கு இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில், இந்திய அணியின் முன்னாள்  வீரர் கவுதம் கம்பீர் ஒரு பெரிய விஷயத்தைக் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தோனி மற்றும் மோர்கன் பற்றி பேசினார் கம்பீர்


இந்தியாவின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான கவுதம் கம்பீர் எம்எஸ் தோனி (MS Dhoni) மற்றும் இயான் மோர்கன் ஆகியோரின் கேப்டன்சி, அதாவது தலைமை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 14 வது ஐபிஎல் சீசனில் இருவருக்கும் ஒரே பேட்டிங் ரெகார்ட் இருந்தாலும், இந்த இரண்டு கிரிக்கெட் வீரர்களையும் யாரும் ஒப்பிடக்கூடாது என்று கம்பீர் நம்புகிறார்.


இரு கேப்டன்களின் மட்டையும் பெரும்பாலும் அமைதியாகவே இருந்தது


எம்எஸ் தோனி மற்றும் இயோன் மோர்கன் இருவரும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தங்கள் பேட்டிங்கில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறிவிட்டனர். தோனி 15 போட்டிகளில் 114 ரன்களும், மோர்கன் 16 போட்டிகளில் 129 ரன்களும் எடுத்துள்ளனர்.


ALSO READ: ஐபிஎல் இறுதிப்போட்டியில் அதிகம் வெற்றி பெற்றவர்கள் யார்? முதலில் பேட்டிங் அல்லது பந்துவீச்சா? 


மோர்கன் தனக்குத்தானே அழுத்தம் கொடுத்துக்கொண்டார்


மோர்கன் பற்றி கவுதம் கம்பீர் (Gautam Gambhir) கூறுகையில், 'அவர் (மோர்கன்) போட்டிகளின் துவக்கத்தில், ஃபார்மில் இல்லாததால் ஐந்தாவது இடத்தில் ஆட வந்தார். ஆனால், அதன் பிறகு அவர் கீழ் நோக்கி சென்று தனக்குத் தானே அதிக அழுத்தத்தை கொடுத்துக்கொண்டார்’ என்றார்.


இரு கேப்டன்களையும் ஒப்பிடுவது சரியல்ல


கெளதம் கம்பீர், 'இரண்டு கேப்டன்களின் செயல்திறனை நீங்கள் ஒப்பிட முடியாது. ஏனென்றால் தோனி நீண்ட காலமாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடவில்லை. ஆனால், மோர்கன் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார்’ என்று கூறினார்.


ஐபிஎல் கோப்பைக்கான போர்


எம்.எஸ்.தோனியின் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) இன்று நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்ல தங்களாலான அனைத்தையும் செய்யும். அதே சமயம், இரண்டு முறை இந்த பட்டத்தை வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அடுத்த வெற்றிக்காக முழு முனைப்புடன் போராடும்.


ALSO READ: சென்னை அணியின் இந்த 5 வீரர்கள் கே.கே.ஆர் கோப்பைக் கனவை தகர்க்க முடியும் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR