ஐபிஎல் 2021 போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று இன்று பைனல் போட்டி நடைபெற உள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத உள்ளன.
ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணி 3 முறையும், கொல்கத்தா அணி இரண்டு முறையும் கோப்பையை வென்று உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வெல்ல இரண்டு அணிகளும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. சென்னை அணி இந்த சீசனில் ஆரம்பத்தில் இருந்தே தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்தது. கடந்த ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாத சென்னை அணி இந்த ஆண்டு முதல் அணியாக பிளே ஆப்புக்கு தகுதி பெற்றது. பேட்டிங்கில் ருத்ராஜ், டுப்ளஸீ, மெயின் அலியும் பவுலிங்கில் தாகூர், ஜடேஜா, பிராவோவும் நல்ல பார்மில் உள்ளனர்.
To the time when we played CSK in an #IPL Final #KKR #CSKvKKR #AmiKKR #KorboLorboJeetbo #আমিKKR #IPL2021 pic.twitter.com/8DskRyLaia
— KolkataKnightRiders (@KKRiders) October 15, 2021
It's Finale Day! Time to shower Whistles and ! Are we ready Super fans? #CSKvKKR #IPL2021Final #WhistlePodu #Yellove pic.twitter.com/wYn865035A
— Chennai Super Kings - Mask Pdu Whistle Pdu! (@ChennaiIPL) October 15, 2021
ஆரம்பத்தில் சொதப்பி வந்த கொல்கத்தா அணி கடைசி கட்டத்தில் சிறப்பாக விளையாடி பிளே ஆப்க்கு தகுதி பெற்றது. 2வது குவாலிபையர் போட்டியில் கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்று பைனல் போட்டிக்கு தகுதி பெற்றது. கொல்கத்தா அணியில் நரேன், ஐயர், திரிபாதி போட்டியை மாற்ற கூடியவர்களாக உள்ளனர். இதுவரை நேரடியாக 24 போட்டிகளில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதியுள்ளன. இதில் சென்னை அணி 16 முறை வென்றுள்ளது.
பிளே ஆப்பிள் நடந்த 3 போட்டிகளிலும் இரண்டாவதாக பேட்டிங் செய்த அணிகளே வெற்றி பெற்றுள்ளன. இதனால் இன்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பீல்டிங் தேர்வு செய்ய இரு அணிகளும் ஆர்வம் காட்டுகின்றன.
ALSO READ சொல்லி வைத்தது போல் நடந்த Qualifier மற்றும் Eliminator போட்டிகள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR