CSK vs KKR IPL Final 2021: இறுதிப் போட்டி துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மகேந்திர சிங் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் இயன் மோர்கனின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும். மகேந்திர சிங் தோனியின் அணியில் உள்ள சில வீரர்களால், மூன்றாவது முறையாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சாம்பியனாக வேண்டும் என்ற கனவை உடைக்ககிக்கூடிய வல்லவர்கள். அந்த வீரர்கள் யார் என்பது குறித்து பார்ப்போம்.
ரவீந்திர ஜடேஜா: இரண்டிலும் மேஜிக் செய்யக்கூடியவர்
தற்போது, உலகின் சிறந்த ஆல்-ரவுண்டர்களைப் பற்றி பேசினால், ரவீந்திர ஜடேஜா நிச்சயமாக விவாதிக்கப்படுவார். இந்த தொடரின் நன்றாக பந்துவீசி வரும் ஹர்ஷல் பட்டேலின் ஒரு ஓவரில் 5 சிக்ஸர்கள் உட்பட 37 ரன்களை அடித்து போட்டியை வெற்றிக்கு அழைத்து சென்றதை யாரால் மறக்க முடியும்? இந்த சுழல் ஆல்-ரவுண்டர் தனது அதிரடியான பாணியைக் காட்டினால், மைதானத்தில் ரன் மற்றும் விக்கெட் மழை பெய்வது உறுதி. ஜடேஜாவுக்கு இன்று முக்கிய பொறுப்பும் இருக்கும். கே.கே.ஆர் தொடக்க வீரர் சுப்மான் கில் நன்றாக ஆடி வருகிறார். ஆனால் வெங்கடேஷ் ஐயர் உட்பட அவரது மற்ற பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு முன்னால் போராடுவதைக் காணலாம். இத்தகைய சூழ்நிலையில், பந்துவீச்சாளர் ஜடேஜாவின் தாக்குதலை கே.கே.ஆர் பேட்ஸ்மேன் எப்படி எதிர்க்கொள்கிறார் என்பதைப் பார்க்க வேண்டும்.
ருதுராஜ் கெய்க்வாட்: அற்புதமான பேட்டிங்
இவர் இதுவரை விளையாடிய போட்டிகளைப் பார்த்தால், ருதுராஜ் கெய்க்வாட்டின் நிலைத்தன்மை ஆச்சரியமாக இருந்தது. இந்த இளம் வீரர் ஒரு சதத்தின் உதவியுடன் இதுவரை 603 ரன்கள் எடுத்துள்ளார் மற்றும் இந்த சீசனில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்த இளம் வீரர் CSK க்கு ஒரு நல்ல தொடக்கத்தை கொடுக்கும் பொறுப்பு இருக்கிறது. இவரை கே.கே.ஆரின் பந்து வீச்சாளர்கள் கட்டுப்படுத்தத் தவறினால், அவர்களுக்கு பெரிய பிரச்சனை ஏற்படலாம்.
ALSO READ | தீடீரென ஓய்வை அறிவித்த சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர்!
ஃபாஃப் டு பிளெசிஸ்: அனுபவம் மற்றும் அதிரடி
சென்னை அணியின் இரண்டாவது தொடக்க வீரர் ஃபாஃப் டு பிளெசிஸ் (Faf du Plessis) மொத்தம் 547 ரன்களுடன் இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார். நல்ல அனுபவம் வாய்ந்த டு பிளெசிஸ் இன் திறமை இன்றைய முக்கியமான போட்டியில் அணிக்கு பயனுள்ளதாக இருக்கும். டு பிளெசிஸின் அதிரடியால் பல முக்கிய போட்டிகளில் அணி வெற்றி பெற்றுள்ளது. கெளதம் கம்பீர் கூட அவரது ஆக்ரோஷமான பேட்டிங்கால் ஆச்சரியப்படுகிறார். அதாவது சமீபத்தில் கெளதம் கம்பீர், தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களை பாராட்டி பேசும் போது, டி-20 போட்டிகளில் இவ்வளவு ஆபத்தான பேட்ஸ்மேனாக ஒருவரால் இருக்க முடியுமா என்று நான் எதிர்பார்க்கவில்லை என்று ஃபாஃப் டு பிளெசிஸ் குறித்து கூறியிருந்தார்.
தீபக் சாஹர்: பந்து வேலை செய்தால் கே.கே.ஆரின் கனவு உடையும்
சிஎஸ்கே அணியில் தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோருக்கு வேகப்பந்து வீச்சு பொறுப்பு இருக்கும். கே.கே.ஆர் முதலில் எதிர்கொள்ளும் பந்துவீச்சாளர் தீபக் சாஹர். தொடக்க ஓவர்களில் விக்கெட்டை பறித்தால், கே.கே.ஆர் அணியை யாராலும் காப்பாற்ற முடியாது. இரு அணிகளுக்கும் இடையே இந்த சீசனின் முதல் சந்திப்பு நடந்தபோது, நிதிஷ் ராணா, சுப்மான் கில், இயன் மோர்கன் மற்றும் சுனில் நரைன் ஆகியோரின் பெரிய விக்கெட்டுகளை தீபக் கைப்பற்றினார். அந்த போட்டி போன்ற ஒரு சூழ்நிலையை உருவாக்காமல் இருக்க தங்களால் இயன்றவரை கொல்கத்தா அணி முயற்சிக்கும்.
ALSO READ | 2012-ல் என்ன நடந்தது? 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பைனலில் மோதும் CSK vs KKR
எம்எஸ் தோனி: கட்டுப்படுத்துவது கடினமான பணி
நீங்கள் மகேந்திர சிங் தோனியை "மகேந்திர பாகுபலி தோனி" என்று அழைக்கலாம். சிஎஸ்கே அணியை அதன் கேப்டனை சிறப்பாக வழிநடத்துவார். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இங்கிலாந்து அணிக்கு ஒரு நாள் உலகக் கோப்பையை வென்றுக் கொடுத்த கேப்டன் இயான் மோர்கன், கிரிக்கெட் உலகின் சிறந்த வியூக நிபுணர் மற்றும் வலிமையான பேட்டிங் , பினிஸ்சர் கொண்ட எம்.எஸ். தோனியை முடித்தவரை எதிர்கொள்வார். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக ஹாட்ரிக் பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் தோனி மீண்டும் ஃபார்முக்கு திரும்பினார். கொல்கத்தா கேப்டன் இயன் மோர்கன் தோனியை கட்டுப்படுத்த தவறவிட்டால், போட்டி "தல தோனி" வசம் செல்லும்.
ALSO READ | தோனியின் ஆட்டம் குறித்து புகழ்ந்த விராட் கோலி; வைரலான போஸ்ட்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR