2012-ல் என்ன நடந்தது? 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பைனலில் மோதும் CSK vs KKR

இரண்டு முறை சாம்பியனான கே.கே.ஆர் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டிக்கு (IPL 2021 Final) வந்துள்ளது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 14, 2021, 03:33 PM IST
  • 2 முறை சாம்பியனான கே.கே.ஆர் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டி
  • 2012 ஆம் ஆண்டில், முதல் முறையாக ஐபிஎல் பட்டத்தை வென்றார்கள்.
  • 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பைனலில் மோதும் அணிகள்.
2012-ல் என்ன நடந்தது?  9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பைனலில் மோதும் CSK  vs KKR title=

துபாய்: ஐபிஎல் 2021 புதன்கிழமை நடைபெற்ற இரண்டாவது தகுதிப் போட்டியில் பரபரப்பான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸை (Delhi Capitals) வீழ்த்தி மூன்றாவது முறையாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இரண்டு முறை சாம்பியனான கே.கே.ஆர் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டிக்கு (IPL 2021 Final) வந்துள்ளது. 2012 ஆம் ஆண்டில், கவுதம் கம்பீரின் தலைமையின் கீழ் அவர்கள் முதல் முறையாக பட்டத்தை வென்றார்கள்.

மைக் ஹஸ்ஸி-முரளி விஜய் (Mike Hussey-Murali Vijay) ஜோடி அதிரடி காட்டினர்:
சென்னை எம்எஸ் சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். முரளி விஜய் மற்றும் மைக் ஹஸ்ஸி ஜோடி சென்னைக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்து முதல் விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்தது. முரளி விஜய்யை அவுட் செய்து, கேஜேஆருக்கு முதல் திருப்புமுனையை ரஜத் பாட்டியா (Rajat Bhatia) வழங்கினார். முரளி 32 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார்.

ரெய்னா 38 பந்துகளில் 73 ரன்கள் விளாசி சிறப்பாக விளையாடினார்:
முரளி விஜய் ஆட்டமிழந்த பிறகு, சின்ன தல சுரேஷ் ரெய்னா (Suresh Raina) மற்றும் ஹஸ்ஸி ஆகியோர் இன்னிங்ஸை வழிநடத்தி தீவிரமாக பேட் செய்து அணியை 17 ஓவர்களில் 160 ரன்களுக்கு கொண்டு சென்றனர். ஜஸ் காலிஸ் ஹஸ்ஸியின் பந்து வீச்சில் கூட்டணி முறிந்தது. ஹஸ்ஸி 43 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 54 ரன்கள் எடுத்தார். ஹஸ்ஸியின் வெளியேற்றத்திற்குப் பிறகு, தோனி மற்றும் ரெய்னா ஸ்கோர் போர்டை முன்னோக்கி எடுத்து 190 ரன்களை எட்டினார்கள் ஆனால் கடைசி பந்தில் ரெய்னா 38 பந்துகளில் 73 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஷாகிப் அல் ஹசனின் பிரட் லீயிடம் கேட்ச் ஆனார். ரெய்னா தனது இன்னிங்ஸில் 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களை அடித்தார். அதே நேரத்தில் தோனி (Dhoni)  9 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சென்னை 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்தது.

ALSO READ |  தோனியின் ஆட்டம் குறித்து புகழ்ந்த விராட் கோலி; வைரலான போஸ்ட்

கொல்கத்தா மோசமான தொடக்கம்:
இதன் பிறகு, 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் கவுதம் கம்பீர் (Gautam Gambhir) மற்றும் மன்வீந்தர் பைஸ்லா (Manvinder Baisla) ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களா களம் இறங்கினார்கள். பென் ஹில்ஃபெனாஸின் முதல் ஓவரில் கம்பீர் அவுட் செய்யப்பட்டு பெவிலியனுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். கம்பீரால் 2 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

பைஸ்லா-காலிஸ் இரண்டாவது விக்கெட்டுக்கு 136 ரன்கள் சேர்த்தனர்:
கம்பீர் ஆட்டமிழந்த பிறகு, பைஸ்லா மற்றும் ஜாக் காலிஸ் ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 136 ரன்கள் சேர்த்தனர். இதற்கிடையில், பைசாலா 27 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். அதன் பிறகு, கொல்கத்தா 9.5 ஓவர்களில் 100 ரன்கள் எடுத்தது. ஆனால் 15 வது ஓவரில், சதத்தை நோக்கி சென்று கொண்டிருந்த பைசாலா 48 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்களுடன் 89 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 

பைஸ்லா, காலிஸ் வெளியேறியதால் கே.கே.ஆர் தடுமாறியது:
பைசாலா வெளியேற்றப்பட்ட பிறகு, பேட் செய்ய வந்த லட்சுமி ரத்தன் சுக்லா, ஹஸ்ஸியின் கைகளில் டுவைன் பிராவோவிடம் பிடிபட்டார். இதன் பிறகு, ரவிச்சந்திரன் அஷ்வின் (Ravichandran Ashwin) வீசிய 18 வது ஓவரின் முதல் பந்தில், பத்ரிநாத் கையில் யூசுப் பதான் கேட்ச் ஆனார். ஸ்கோர் 17.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்திருந்தது. 

ALSO READ |  தீடீரென ஓய்வை அறிவித்த சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர்!

அப்பொழுது கே.கே.ஆர் அணிக்கு வெற்றி பெற 17 பந்துகளில் 26 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் ஜாக் காலிஸ் (Jacques Kallis) களத்தில் இருந்தார். நன்றாக ஆடி வந்த காலிஸ் 49 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 

கடைசி ஓவரில் மனோஜ் திவாரியால் வெற்றி:
காலிஸ் ஆட்டமிழந்த பிறகு, கே.கே.ஆர் வெற்றி பெற 7 பந்துகளில் 15 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. மனோஜ் திவாரி மற்றும் ஷகிப் அல் ஹசன் ஆகியோர் களத்தில் இருந்தனர். சென்னை வீரர் ஹெல்பெனாஸ் தனது ஓவரின் கடைசி பந்தை நோ பால் ஆக வீசினார். அந்த பந்தில் மொத்தம் 7 ரன்கள் கிடைத்தது. இதன் பிறகு, கடைசி ஓவரில் கே.கே.ஆர் வெற்றி பெற 8 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. அத்தகைய சூழ்நிலையில், தோனி தனது டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் டுவைன் பிராவோவின் (Dwayne Bravo)  கையில் பந்தை வீசினார். முதல் இரண்டு பந்துகளில் பிராவோ தலா ஒரு ரன் கொடுத்தார், ஆனால் அதன் பிறகு மனோஜ் திவாரி (Manoj Tiwary) தொடர்ந்து இரண்டு பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் அடித்து கே.கே.ஆரை முதல் முறையாக ஐபிஎல் சாம்பியனாக்கினார்.

அந்த 6 வீரர்கள் இன்னும் அணியில் இருக்கிறார்கள்:
2012 ஆம் ஆண்டில் சென்னை அணிக்கும் கேஆருக்கும் இடையிலான போட்டியில் விளையாடிய பல வீரர்கள் இன்னமும் சென்னை அணியில் இருக்கிறார்கள். இதில் எம்எஸ் தோனி, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ உள்ளனர். மறுபுறம், ஷகிப் அல் ஹசன் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் கே.கே.ஆர் அணியில் உள்ளனர். 

ALSO READ |  எளிதான போட்டியை கஷ்டப்பட்டு வென்று பைனலுக்கு சென்றது கொல்கத்தா!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News