IPL 2021 RR vs RCB: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றி
துபாயில் நடைபெற்ற ஐபில் போட்டியில் 7விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றி பெற்றது.
துபாயில் நடைபெற்ற ஐபில் போட்டியில் 7விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றி பெற்றது.
முதலில் களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்திருந்தது. 150 ரன்களை இலக்காகக் கொண்டு களம் இறங்கிய விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதும் போட்டிகள் அனைத்திலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்று வருகிறது.
Also Read | RCB vs RR: டாஸ் வென்ற ஆர்சிபி பீல்டிங் தேர்வு
யூ.ஜி. சாஹல் ஆட்டநாயகனுக்கான விருதைப் பெற்றார். அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் விருது கொடுக்கப்பட்டது.
தேவதூத் படிக்கலுக்கு சிறந்த கேட்சுக்கான பரிசாக ஒரு லட்சம் பரிசுத் தொகை கிடைத்தது. கிளென் மேக்ஸ்வெலுக்கு சிறந்த பேட்டருக்கான பரிசு ஒரு லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது.
சிறந்த சிக்சருக்கான பரிசு, துரிதமான ரன்கள் எடுத்தவர் எவின் விலீஸ். இன்று எவின் விலீஸின் நாள் என்பதை அவர் நிரூபித்தார். ஒவ்வொரு பரிசும் தலா ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ளது.
முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான எவின் லூயிஸ் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் அணிக்கு அருமையான தொடக்கத்தை அளித்தனர்.
ஆனால், அணியின் நடுத்தர வரிசை சரிவை சந்தித்தது. லூயிஸ் அவுட்டான பிறகு, ஆர்ஆர் மஹிபால் லோமோர், ராகுல் தேவாடியா, சஞ்சு சாம்சன் மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோர் தொடர்ந்து வெளியேறினர்.
Also Read | பானி பூரி விற்பனையாளராக இருந்து சூப்பர் கிரிக்கெட்டராக உயர்ந்த RR பேட்டர்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR