IPL 2022: கொல்கத்தா மற்றும் டெல்லி டார்கெட் செய்யும் வீரர்கள்!
இந்த மாதம் ஐபிஎல் மெகா ஏலம் பெங்களூருவில் நடைபெற உள்ளது.
வரவிருக்கும் மெகா ஏலம் ஒவ்வொரு அணிக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த வகையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் எதிர்காலத்தினை தீர்மானிக்கும் ஏலமாக இது உள்ளது. அனுபவம் வாய்ந்த வீரர்கள் குறைவாக உள்ளது தான் கொல்கத்தா அணியின் பலவீனமாக இருந்தது. ஐபிஎல்லில் (IPL) இதுவே கடைசி மெகா ஏலமாக இருக்கும் என்பதை மனதில் வைத்து, ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் முக்கிய வீரர்களை குறிவைக்க உள்ளது.
ALSO READ | மகாராஷ்டிராவில் மட்டும் ஐபிஎல் 2022 போட்டிகள்?
கொல்கத்தா நான்கு வீரர்களை தக்கவைத்துக்கொள்ள ஏற்கனவே 34 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். ஆண்ட்ரே ரசல் (INR 12 கோடி), வருண் சக்ரவர்த்தி (INR 8 கோடி), வெங்கடேஷ் ஐயர் (INR 8 கோடி), சுனில் நரைன் (INR 6 கோடி) ஆகியோரை KKR தக்கவைத்து, எதிர்காலத்திற்கு அடித்தளம் அமைக்க வீரர்களை நம்பியுள்ளது. முழுமையான ஆல்ரவுண்ட் அணியை தயார் செய்ய அவர்களிடம் இன்னும் 48 கோடிகள் உள்ளன. இதற்கிடையில், மெகா ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஷிகர் தவான், டேவிட் வார்னர், குயின்டன் டி காக், கிறிஸ் லின் ஆகியோரை குறிவைத்து உள்ளது.
இந்த நான்கு வீரர்களில் குறைந்தது இருவரையாவது ஏலத்தில் எடுக்க KKRக்கு அதிக வாய்ப்பு உள்ளது. தவான் மற்றும் வார்னர் ஆகிய இருவரில் ஒருவருக்கு கேப்டன் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டி காக் மற்றும் லின்னை ஏலத்தில் வாங்க முடிந்தால், KKR க்கு ஒரு விக்கெட் கீப்பர் மற்றும் தொடக்க வீரராக இன்னொரு வீரரும் அணியில் இருப்பார்.
இதேபோல், டெல்லி கேபிடல்ஸ் அணியும் இந்த ஏலத்தில் முக்கிய வீரர்களை வாங்க திட்டமிட்டு உள்ளது. 47.4 கோடிகள் மீதம் உள்ள நிலையில், ரிஷப் பந்த் (INR 16 கோடி), அக்சர் படேல் (INR 9 கோடி), பிருத்வி ஷா (INR 7.5 கோடி), அன்ரிச் நார்ட்ஜே (INR 6.5 கோடி) ஆகியோரைத் தக்கவைத்துக்கொண்டனர். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு சவாலாக இருப்பது அவர்களின் பழைய அணியை மீண்டும் உருவாக்குவதுதான். கடுமையான தக்கவைப்பு விதிகள் காரணமாக அவர்கள் ஸ்ரேயாஸ் ஐயர், ஷிகர் தவான், ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ககிசோ ரபாடா ஆகியோரை விடுவிக்க வேண்டியிருந்தது. இவர்களை மீண்டும் அணியில் எடுக்க கடும் போட்டி நிலவும். மேலும் ஏலத்தில் சாம் பில்லிங்ஸ் மற்றும் ஆரோன் பின்ச்யை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.
ALSO READ | இந்திய அணிக்கு திரும்பும் 3 முக்கிய வீரர்கள்..! டிராவிட் ப்ளான்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR