கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளின் முதல் பாதி மட்டுமே இந்தியாவில் நடத்தப்பட்டது. வீரர்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், போட்டி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு பின்னர், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. 2020-ல் ஐ.பி.எல் போட்டியில் குவாலிபையருக்கு தகுதி பெறாமல் வெளியேறிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மாஸாக திரும்பி வந்து கடந்த ஆண்டு கோப்பையையும் தட்டிச் சென்றது.
ALSO READ | IPL2022: இந்த ஆண்டு ஐ.பி.எலுக்கு 'No' சொன்ன ஸ்டார் பிளேயர்ஸ்..!
இந்நிலையில், இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகள் இந்தியாவில் நடைபெறுமா? அல்லது வெளிநாட்டில் நடைபெறுமா? என்ற கேள்வி பொதுவெளியில் எழுந்தது. கடந்த சில மாதங்களாக அதிகரித்து வந்த கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வளிநாட்டில் நடத்துவது குறித்து பிசிசிஐ ஆலோசித்ததாக தகவல் வெளியானது. ஆனால், இந்த ஆண்டு இந்தியாவில் மட்டுமே ஐ.பி.எல் போட்டிகளை நடத்துவது என்பதில் பிசிசிஐ திட்டவட்டமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ALSO READ | ஐ.பி.எல் உரிமையாளர்களை நாளை சந்திக்கும் பிசிசிஐ..! எதுக்கு தெரியுமா?
குறிப்பாக, மும்பை வான்கடே, டிஓய் பாட்டீல் ஆகிய மைதானங்களில் அனைத்து போட்டிகளையும் நடத்த திட்டமிட்டுள்ள பிசிசிஐ, தேவைப்பட்டால் அருகில் இருக்கும் புனே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் சில போட்டிகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளது. மேலும், இந்தப் போட்டிகள் அனைத்தும் கடந்த ஆண்டைப் போல் ரசிகர்கள் இல்லாமல் நடத்த பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் ஏலம் அடுத்த மாதம் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நடத்தவும் பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR