பயிற்சியாளரை மைதானத்திற்குள் அனுப்பிய பந்த்! ஐபிஎல் போட்டியில் சர்ச்சை
நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க டிசி கேப்டன் ரிஷப் பந்த், பயிற்சியாளர் பிரவின் ஆம்ரேவை மைதானத்திற்கு அனுப்பினார்.
இந்தியன் பிரீமியர் லீக் 2022-ன் (ஐபிஎல்) 34வது ஆட்டத்தில் நேற்று வான்கடே மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இறுதியில் ராயல்ஸ் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தாலும், மூன்றாவது பந்தில் ஓபேட் மெக்காய் இடுப்பளவு உயரமான நோ-பால் ஒன்றை ஆன்-பீல்ட் அம்பயர் கொடுக்காததால், கடைசி ஓவரில் ஆட்டம் சர்ச்சையில் சிக்கியது. ஐபிஎல் தொடரில் அம்பயரிங் என்பது பல ஆண்டுகளாக கேள்விக்குறியாக உள்ளது, இந்த சீசனும் அது தொடர்கிறது.
மேலும் படிக்க | RRvsDC: நூறு எனக்கு ரொம்ப ராசி - பட்லர் மந்திரம்
மெக்காய் தனது லைனைத் தவறவிட்டு, அதிக ஃபுல் டாஸை போட்டதால், நோபால் கோரிக்கை வந்தது. 6 பந்துகளில் 36 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் இருந்த டெல்லி அணிக்கு ரோவ்மேன் பவல் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். கடைசி ஓவரின் முதல் இரண்டு பந்துகளும் சிக்ஸ்சர் பறந்தது. மூன்றாவது பந்தும் சிக்ஸ்சர் போக, இதற்கு நோபால் கேட்கப்பட்டது. 3 பந்துகளில் 18 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் நோபால் கொடுத்தால், ப்ரீ ஹிட் கிடைக்கும், போட்டி டெல்லி பக்கம் சாய வாய்ப்பு இருந்தது. ஆனால், நடுவர்கள் அதை நோ-பால் என்று தீர்மானிக்கவில்லை. இதனால் கோபமடைந்த கேப்டன் ரிஷப் பந்த் பயிற்சியாளர் பிரவின் ஆம்ரேவை மைதானத்திற்கு அனுப்பினார்.
ஷேன் வாட்சன் மற்றும் பிரவின் ஆம்ரே போன்றவர்கள் முதலில் நான்காவது நடுவரிடம் ஒரு வார்த்தை பேசி பின்னர் முடிவை மாற்றுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் நோபால் அறிவிக்காததால், பந்த் டெல்லி வீரர்களை திரும்ப அழைக்க முடிவு செய்தார். ஜோஸ் பட்லர் மற்றும் பந்த் பவுண்டரி லைனில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. ரிஷப் பந்த் நடுவரின் முடிவை எதிர்த்து பயிற்சியாளர் அம்ரேவை களத்தில் அனுப்ப இன்னும் பரபரப்பு கூடியது. அந்த பந்து நோபால் தான் என்பதை கணிக்க முடிகிறது, இருப்பினும் நடுவர்கள் தர வில்லை. டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் நேற்றையா போட்டியில் மைதானத்தில் இல்லை, அவர் தனது குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு COVID-19 தொற்று ஏற்பட்டதால் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார். அம்பயர் நோபால் தராததால் இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.
இதே போல் 2019ம் ஆண்டு சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் விளையாடிய போது, கடைசி ஓவரில் நோபால் சர்ச்சை ஏற்பட்டது. அப்போது சென்னை அணியின் கேப்டன் தோனி மைதானத்திற்குள் இறங்கி அம்பயறுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. பிறகு தோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் படிக்க | பரபரப்பான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR