நேற்று ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பல சுவாரஸ்யங்கள் நடைபெற்றது.  இந்த ஐபிஎல் 2022 சீசன் ஆரம்பத்தில் ரசிகர்களுக்கு மிகவும் கவலையாகவே அமைந்தது, காரணம் மும்பை மற்றும் சென்னை அணிகள் தொடர் தோல்வியை சந்தித்து வந்தனர். மறுபுறம் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற முக்கியமான வீரர்கள் ஃபார்மில் இல்லாமல் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறிக் கொண்டிருந்தனர். முக்கியமாக கோலியின் பார்ம் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் மிகவும் கவலை அடைய செய்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | ‘ஹிட்மேன்’ ரோகித் சர்மாவைப் பற்றித் தெரியாத சுவாரஸ்யத் தகவல்கள்!


தொடர்ந்து இரண்டு போட்டிகளில் டக் அவுட் ஆகி வெளியேறினார் கோலி. இருப்பினும் அவரது ரசிகர்கள் கோலியின் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருந்தனர். நேற்று ரோஹித் சர்மா தனது பிறந்தநாளை கொண்டாடினார், இந்த தினத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு கோலி அரை சதம் அடித்திருந்தார். இதனால் கோலி ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். பிறகு யாரும் எதிர்பார்க்காத விதமாக சிஎஸ்கே அணியின் கேப்டனாக மீண்டும் தோனியை தொடருவார் என்று அறிவிப்பு வெளியானது. இந்த ஐபிஎல் 2022 தொடக்கத்தில் கேப்டன் பொறுப்பை ஜடேஜாவிடம் கொடுத்திருந்தார் தோனி. 



தற்போது மீண்டும் சென்னை அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். இதனால் தோனி மற்றும் சிஎஸ்கே ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். மேலும் ஐபிஎல் 2022 போட்டியில் தொடர்ந்து 8 போட்டியில் தோல்வியுற்ற மும்பை அணி மிகவும் மோசமான நிலையில் இருந்தது. பிளே ஆப்பில் ஏற்கனவே வெளியேறி உள்ள மும்பை அணி ஒரு போட்டியில் ஆவது வெற்றி பெற போராடியது.  இந்நிலையில் ரோஹித்தின் பிறந்தநாளான நேற்று மும்பை அணி தனது முதல் போட்டியில் வெற்றி பெற்றது. 


மேலும் படிக்க | ரோஹித் ஷர்மா முன் உள்ள மிகப்பெரிய சவால்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR