ரோஹித் ஷர்மா முன் உள்ள மிகப்பெரிய சவால்கள்!

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.    

Written by - RK Spark | Last Updated : Apr 30, 2022, 06:14 AM IST
  • இந்திய அணியின் கேப்டனாக உள்ளார் ரோஹித்.
  • இவர் தலைமையில் உள்கோப்பையில் விளையாட உள்ளது இந்தியா.
  • வலுவான அணியை தயார் படுத்தி வருகிறார்.
ரோஹித் ஷர்மா முன் உள்ள மிகப்பெரிய சவால்கள்! title=

கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை 2021-ல் இந்தியா படுமோசமாக விளையாடி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.  ஐசிசி கோப்பைக்காக இந்திய அணியின் ரசிகர்கள் 8 ஆண்டுகால காத்துகொண்டு உள்ளனர்.  இதனை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நிறைவேற்றும் என்று பலரும் காத்துகொண்டு உள்ளனர்.  ரோஹித் ஷர்மா இந்த சகாப்தத்தின் சிறந்த பேட்டர்களில் ஒருவராக திகழ்கிறார். 

மேலும் படிக்க | இவர்தான் சரியான ஆள்., பிசிசிஐக்கு அட்வைஸ் கொடுத்த யுவராஜ் சிங்!

ரோஹித் ஷர்மா தனது கேரியரில் கடந்த 6 மாதங்களாக சிறப்பாக செயல்பட்டுள்ளார்.  கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இருந்து இந்தியா வெளியேறிய பிறகு இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக ரோஹித் நியமிக்கப்பட்டார்.  இந்த ஆண்டு ஜனவரியில், கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை இழந்த பிறகு, கோஹ்லி கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.  இதனால் ரோஹித் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றார்.  2019 ஆம் ஆண்டு வரை இந்திய அணியில் இடம் பெற முடியாமல் திணறிக் கொண்டிருந்த ரோஹித்துக்கு தற்போது கேப்டன் பதவியே கிடைத்துள்ளது.  

rohit

தற்போது மூன்றுவித அணிக்கு கேப்டனாக உள்ள ரோஹித் ஷர்மா மீது அனைத்து கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையும் உள்ளது.  தோனி தலைமையில் இந்திய அணி பல வெற்றிகளை பெற்றது.  அதன் பிறகு விராட் கோஹ்லி தலைமையில் எண்ணற்ற சாதனைகளை படைத்து இருந்தது.  ஆனாலும், ஐசிசி கோப்பைகளை வெல்ல முடியாதது கோஹ்லிக்கு மிகப்பெரிய பாரமாக இருந்தது.  கேப்டனாக ரோஹித் ஷர்மா பல சாதனை படைத்துள்ளார். இந்தியாவின் ஸ்டாண்ட்-இன் கேப்டனாக, ஆசிய கோப்பை, நிதாஹாஸ் டிராபி மற்றும் மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக 9 ஆண்டுகளில் 5 கோப்பை என அணியை சிறப்பாக வழி நடத்தி உள்ளார். 


 
ரோஹித் சர்மா இந்திய அணியின் முழு நேர கேப்டனாக பொறுப்பேற்ற தனது முதல் போட்டியிலேயே இந்தியா நியூசிலாந்தை வீழ்த்தியது. மேலும், மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கை அணியுடன் வெற்றிகளை பதிவு செய்தார்.  இருப்பினும், ரோஹித்துக்கு கடினமான சவால்கள் காத்திருக்கின்றன. அக்டோபர்-நவம்பரில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை 2022-க்கு சரியான அணியை தேர்வு செய்வது மிகவும் அவசியம்.  தற்போது இந்திய அணியின் மூத்த வீரர்கள் ஐபிஎல் 2022-ல் மிகவும் சொதப்பலான பேட்டிங் மற்றும் பவுலிங்கில் உள்ளனர்.  ரோஹித் தலைமையில் மும்பை அணியும் 8 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் தோல்வியை சந்தித்து உள்ளது.  மேலும், பார்மில் சரிவை சந்தித்து வரும் விராட் கோலியை ரோஹித் எப்படி எதிர்கொள்கிறார் என்பது அடுத்த சில மாதங்களில் தெரிய வரும்.  ஐசிசி கோப்பைக்காக காத்திருக்கும் 8 ஆண்டுகால கனவை ரோஹித் நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  

மேலும் படிக்க | 150 கி.மீ வேகத்தில் ஸ்டம்புகளை தெறிக்க விடும் ஹைதராபாத் புயல் - இந்திய அணி வாய்ப்பு பிரகாசம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News