ஐபிஎல் 2022 கோப்பையை வென்றது குஜராத் டைட்டன்ஸ்!
ஐபிஎல் 2022ன் பைனல் போட்டியில் குஜராத் அணி ராஜஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது.
ஐபிஎல் 2022ன் பைனல் போட்டி இன்று அஹமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் அமித்சா நேரில் வந்து போட்டியை கண்டு ரசித்தார். மைதானம் முழுக்க ரசிகர்கள் நிறைந்து இருக்க இந்த பைனல் போட்டி நடைபெற்றது. ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிக்கு இடையே நடைபெற்ற இந்த போட்டியில் ராஜஸ்தான் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
மேலும் படிக்க | IPL 2022 Fiinal: இறுதிப் போட்டியில் பிரதமர் மற்றும் அமித் ஷா: ரஹ்மான் நிகழ்ச்சி
ராஜஸ்தான் அணிக்கு வழக்கம் போல ஓப்பனிங் சூப்பராக அமைந்தது. ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் சிறப்பாக ஆடி ரன்கள் சேர்த்தனர். பட்லர் 39 ரன்களுக்கு அவுட் ஆக, கேப்டன் சஞ்சு சாம்சன் 14 ரன்களுக்கு வெளியேறினார். இதன் பிறகு களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர். ஐபிஎல் பைனல் போட்டியை போல் இல்லமால் சுமாரான போட்டியாகவே இது நகர்ந்தது. 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்களை இழந்து 130 ரன்கள் மட்டுமே அடித்தது.
எளிதான இலக்கை எதிர்த்து ஆடிய குஜராத் நிதானமாகவே ஆடியது. இருப்பினும் பவர் பிளேயில் 2 விக்கெட்களை இழந்து தடுமாறியது. விக்கெட்களை எடுத்தால் மட்டும் தான் வெற்றி பெற முடியும் என்ற நிலையில் ராஜஸ்தான் ஆடியது. கில், ஹர்திக் பாண்டியா சிறப்பாக பேட்டிங் செய்ய ரன்கள் உயர்ந்தது. 18.1 ஓவரில் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து கோப்பையை வென்றது குஜராத் டைட்டன்ஸ். தனது முதல் ஐபிஎல் போட்டியிலேயே குஜராத் அணி கோப்பையை வென்றுள்ளது.
மேலும் படிக்க | IPL 2022 Final: ஐபிஎல் இறுதிப்போட்டியை மழை பாதிக்குமா? வானிலை முன்னறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR