IPL 2022 Final: ஐபிஎல் இறுதிப்போட்டியை மழை பாதிக்குமா? வானிலை முன்னறிவிப்பு

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2022யில் வானிலை பாதித்தால் ஜெயிக்கும் வாய்ப்பு இந்த அணிக்குத்தான்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 29, 2022, 01:35 PM IST
  • ஐபிஎல் இறுதிப் போட்டியை வானிலை பாதிக்குமா?
  • வானிலை பாதித்தால் கோப்பையை வெல்லும் வாய்ப்பு எந்த அணிக்கு?
  • அகமதாபாதில் குஜராத் அணிக்கு வானிலை சாதகமாகுமா?
IPL 2022 Final: ஐபிஎல் இறுதிப்போட்டியை மழை பாதிக்குமா? வானிலை முன்னறிவிப்பு title=

IPL 2022 Final GT vs RR Weather Report: வானிலை ஐபிஎல் இறுதிப்போட்டியை பாதிக்குமா? பாதித்தாலும் இந்த விஷயத்தில் குஜராத் டைட்டன்ஸ் சாம்பியனாக இருக்கும் என்பது கணிக்கப்படுகிறது.

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2022 போட்டி இன்று (மே 29) இரவு 8 மணிக்கு தொடங்கும். அப்போது , வெப்பநிலை சுமார் 37 டிகிரியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, போட்டி முடியும் நேரத்தில் வெப்பம் 33 டிகிரிக்கு கீழே வரும்.

ஹர்திக் பாண்டியாவின் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இடையேயான முக்கியமான போட்டிக்கான வானிலை எப்படி இருக்கும் என்பதுதான் ஒவ்வொரு ரசிகர் மனதிலும் உள்ள கேள்வி.

மேலும் படிக்க | IPL 2022 Fiinal: இறுதிப் போட்டியில் பிரதமர் மற்றும் அமித் ஷா: ரஹ்மான் நிகழ்ச்சி

ஐபிஎல் 2022 இறுதிப் போட்டிக்கு ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் இரு அணிகளுக்கும் மிகவும் வெப்பமான மற்றும் ஈரப்பதமான நாள் என்று வானிலைத் துறை கணித்துள்ளது.

குஜராத்தின் தலைநகர் ஞாயிற்றுக்கிழமை பகலில் அதிகபட்சமாக 43 டிகிரியைக் இருக்கும், ஆனால் ரன்வீர் சிங் மற்றும் ஏஆர் ரஹ்மான் இடம்பெறும் பிரமாண்டமான நிறைவு விழாவிற்குப் பிறகு இரவு 8 மணிக்கு இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன்பு வெப்பநிலை சற்று குறையும்.

இரவு 8 மணிக்கு போட்டி தொடங்கும் நேரத்தில், வெப்பநிலை சுமார் 37 டிகிரியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, போட்டி முடியும் நேரத்தில் சுமார் 33 டிகிரிக்கு வரும். 39 கிமீ/மணி வேகத்தில் அதிக காற்றின் வேகத்துடன் 51 சதவீத ஈரப்பதத்துடன் வானிலை மிகவும் ஈரப்பதமாக இருக்கும்.

மேலும் படிக்க | IPL டிவிஸ்ட்: மழை பெய்தால் இந்த அணி இறுதிப்போட்டிக்கு போகும்

ஐபிஎல் 2022 இறுதிப் போட்டிக்கான அகமதாபாத் வானிலையை இங்கே பார்க்கவும்...

ஐபிஎல் 2022 இறுதிக்கான வானிலை கணிப்பு

இருப்பினும், ஐபிஎல் 2022 இறுதிப் போட்டியின் போது மழை பெய்ய வாய்ப்பில்லை என்பது நல்ல செய்தி. ஆனால் ஐபிஎல் 2022 இறுதிப் போட்டியை மழை பாதித்தால் என்ன ஆகும்?

லூயிஸ் பிலிப்
அப்படியானால் சூப்பர் ஓவர் போட்டியின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும். குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் பிளே ஆஃப் மற்றும் இறுதிப் போட்டிக்கு லூயிஸ் பிலிப் விதி பொருந்தும்.

மேலும் படிக்க | IPL2022: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குஜராத் டைட்டன்ஸ்

சூப்பர் ஓவர்களை நடத்துவதற்கு மைதானம் பொருத்தமாக இல்லாவிட்டால், லீக் நிலைகள் போட்டியின் வெற்றியாளர்களைத் தீர்மானிக்கும்.

இதற்கிடையில், மே 29 அன்று திட்டமிடப்பட்ட அட்டவணையின்படி இறுதிப் போட்டியை நடத்த வானிலை அனுமதிக்கவில்லை என்றால், அடுத்த போட்டி மே 30 நடைபெற்று வெற்றியாளர் யார் என்பது தீர்மானிக்கப்படும்.

"பிளேஆஃப் ஆட்டத்தில் நிலைமையை பொருத்து ஓவர்களின் எண்ணிக்கை, தேவைப்பட்டால், ஒவ்வொரு அணியும் ஐந்து ஓவர்கள் பேட் செய்யும் வாய்ப்பைக் குறைக்கலாம்" என்று ஐபிஎல் வழிகாட்டுதல்கள் படிக்கின்றன.

மேலும் படிக்க | கப் மிஸ்ஸானாலும் இந்த விஷயத்துல மும்பைதான் இந்த தடவை சாம்பியனாம்!

இதற்கிடையில், டாஸ்க்குப் பிறகும் ரிசர்வ் நாளில் ஆட்டம் சாத்தியமில்லை என்றால், ரிசர்வ் நாளில் புதிய ஆட்டம் நடத்தப்படும். வழிகாட்டுதல்களின்படி, ரிசர்வ் நாளில் அதே அளவு விளையாடும் நேரத்தைக் கொண்டிருக்கும்.

அதாவது ஐந்து மணிநேரம் மற்றும் 20 நிமிடங்கள் நடைபெறும் போட்டியிலும் ஏதேனும் வானிலை சீர்குலைவு ஏற்பட்டால் கிடைக்கும் இரண்டு கூடுதல் மணிநேரங்கள் கிடைக்கும்.

முதன்முறையாக, ஐபிஎல் நிறைவு விழா ஆக்மென்டட் ரியாலிட்டியில் (augmented reality (AR)) ஒளிபரப்பப்படும். மொத்தம், 700க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

மேலும் படிக்க | ஐபிஎல் பிளே ஆப்பில் அதிக ரன்கள் அடித்த வீரர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News