மகாராஷ்டிராவில் மட்டும் ஐபிஎல் 2022 போட்டிகள்?
ஐபிஎல் 2022 லீக் ஆட்டங்கள் அனைத்தும் மகாராஷ்டிராவிலும், பிளேஆஃப் அகமதாபாத்திலும் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் 2022-ல் இரண்டு புதிய அணிகளுடன் குறைந்தது 74 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் அகமதாபாத் அணிகளுடன் மொத்தமாக 10 அணிகள் இந்த ஐபிஎல்-ல் விளையாட உள்ளன. கொரோனா சூழல் காரணமாக இந்தியா பிரீமியர் லீக் (IPL) 2022 அனைத்து லீக் போட்டிகளும் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 6) தொடங்கும் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் நடைபெறும் அகமதாபாத் மைதானத்தில் ஐபிஎல் 2022 பிளேஆஃப் போட்டிகள் நடைபெற உள்ளது.
ALSO READ | IPL2022: சென்னை சூப்பர் கிங்ஸூக்கு கேப்டன் தோனியா? ஜடேஜாவா?
பல கிரிக்கெட் மைதானங்களை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்த பிசிசிஐ (BCCI) முடிவு செய்து வருகிறது. நான்கு ஸ்டேடியங்களில், பிசிசிஐ ஒரே நேரத்தில் பல ஆட்டங்களை நடத்தவும் திட்டம் வைத்துள்ளது. இப்போது, மகாராஷ்டிராவில் லீக் ஆட்டத்தையும், அகமதாபாத்தில் பிளேஆஃப்களையும் ஏற்பாடு செய்வது குறித்து பிசிசிஐ ஆலோசித்து வருகிறது.
இந்தியாவில் கோவிட்-19 பரவல் தற்போது இருக்கும் நிலையில் இருந்தால், இங்கு போட்டிகள் நடத்தலாம் என்றும், நிலைமை மோசமடைந்தால் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குச் மாற்றிவிடலாம் என்றும் தற்போது வரை முடிவு செய்துள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகின்றன. கோவிட்-19 பரவல் குறையும் பட்சத்தில் மைதானங்களில் குறைந்தது 25 சதவீதக் பார்வையாளர்களை அனுமதிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 2022 போட்டிகள் சுமார் இரண்டு மாதங்கள் நடைபெற உள்ளது. மார்ச் கடைசி வாரத்தில் தொடங்கி மே இறுதி வரை நடைபெறும் என்று ஏற்கனவே பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார்.
ஐபிஎல் மெகா ஏலம் இந்த மாதம் 13 மற்றும் 14ம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெற உள்ளது. இதற்காக ஆலோசனை நடத்த தோனி சிறிது தினங்களுக்கு முன்பு சென்னை வந்திருந்தார். சிஎஸ்கே தரப்பில், அணியில் இருந்த பழைய வீரர்களையே மீண்டும் எடுக்க திட்டம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
ALSO READ | சென்னை வந்துள்ள தோனி! காரணம் இதுதான்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR