IPL2022: சென்னை சூப்பர் கிங்ஸூக்கு கேப்டன் தோனியா? ஜடேஜாவா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த ஆண்டும் கேப்டனாக தோனி தொடர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 14, 2023, 10:58 AM IST
  • தோனி தலைமையில் களமிறங்கும் சி.எஸ்.கே
  • புதிய கேப்டன் நியமிக்க அணி நிர்வாகம் விரும்பவில்லை
  • ஐ.பி.எல் ஏலம் குறித்து தோனி ஆலோசனை
IPL2022: சென்னை சூப்பர் கிங்ஸூக்கு கேப்டன் தோனியா? ஜடேஜாவா? title=

ஐ.பி.எல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு யாரை தேர்வு செய்யலாம்? என்பது குறித்து ஆலோசிக்க தற்போதைய கேப்டனாக இருக்கும் தோனி சென்னை வந்துள்ளார். ஆனால், அவர் இந்த ஆண்டு கேப்டன் பதவியில் தொடருவாரா? அல்லது ஜடேஜாவிடம் கொடுத்துவிடுவாரா? என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.

மேலும் படிக்க | IPL2023: தோனி ஹூக்கா மிகவும் விரும்பி பிடிப்பார் - ஜார்ஜ் பெய்லி

அதற்கு முக்கிய காரணம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் ரீட்டெயின் லிஸ்டில் தோனியின் பெயர் இரண்டாவதாக இடம்பெற்றிருந்தது. முதல் இடம் ஜடேஜாவுக்கு கொடுக்கப்பட்டு 16 கோடிக்கு அவரை சென்னை அணி தக்கவைத்துக் கொண்டது. அணியின் கேப்டனாக இருக்கும் தோனி, 12 கோடி ரூபாய்க்கு தக்க வைக்கப்பட்டார். இதனால், இந்த ஆண்டு முதல் கேப்டன் பொறுப்பை ஜடேஜாவுக்கு கொடுக்கும் வகையில் தோனி மற்றும் சென்னை அணி நிர்வாகம் இத்தகைய முடிவை எடுத்திருப்பதாக கூறப்பட்டது. தோனியும் தனக்கு பிறகு சரியான கேப்டனை அணிக்கு கொடுக்கும் பொருட்டு இந்த முடிவை எடுத்ததாகவும் தகவல் வெளியானது.

ALSO READ | India Squad: குல்தீப் Come Back..! ஓரம்கட்டப்படும் சீனியர் வீரர்?

இந்த தகவல்கள் தல தோனியின் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது. தோனி என்ற ஒருவருக்காகவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகளை பார்த்து வரும் ரசிகர்கள், அவரே இந்த ஆண்டும் சென்னை அணியின் கேப்டனாக தொடர வேண்டும் என விரும்பினர். இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தோனிக்கு பதிலாக புதிய கேப்டன் நியமிக்கும் முடிவை கைவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், எதிர்வரும் ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தல தோனி தலைமையிலேயே களமிறங்க உள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News