ஐபிஎல் போட்டிகளை மாற்றி அமைத்த பிசிசிஐ!
ஐபிஎல் 2022 போட்டிகளை ஐந்து அணிகள் கொண்ட இரண்டு குழுக்களாக மாற்றி உள்ளது பிசிசிஐ.
இந்த ஆண்டு ஐபிஎல்-ல் 2 புதிய அணிகள் இணைந்து மொத்தமாக 10 அணிகள் விளையாட உள்ளது. 10 ஐபிஎல் அணிகளும் தலா 14 லீக் போட்டிகளில் (7 சொந்த ஊர் மற்றும் 7 வெளியூரில்) விளையாடும் என்று பிசிசிஐ அறிவித்தது. ஒவ்வொரு அணியும் ஐந்து அணிகளுடன் இரண்டு முறையும், மீதமுள்ள நான்கு அணிகள் ஒரு முறையும் மோதும். அணிகளின் ஐபிஎல் சாம்பியன்ஷிப் வெற்றிகளின் எண்ணிக்கை மற்றும் இறுதித் போட்டிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க | மும்பை இந்தியன்ஸூக்கு எதிராக மற்ற ஐபிஎல் அணிகள்..!
ஒவ்வொரு அணியும் தங்கள் குழுவில் உள்ள அணிகளுடன் இரண்டு முறையும், மற்ற குழுவில் அதே வரிசையில் உள்ள அணியுடன் இரண்டு முறையும் விளையாடும். மற்ற குழுவில் உள்ள மீதமுள்ள நான்கு அணிகளுக்கு எதிராக, ஒவ்வொரு அணியும் ஒரு முறை மட்டுமே விளையாடும். எடுத்துக்காட்டாக, கேகேஆர் அணி மும்பை, ராஜஸ்தான், டெல்லி, லக்னோ, ஹைதெராபாத் ஆகியவற்றுக்கு எதிராக லீக் நிலைகளில் இரண்டு முறை விளையாடும். சென்னை, பெங்களூரு, பஞ்சாப், குஜராத் அணிகளுடன் ஒருமுறை மட்டுமே விளையாடும்.
இது 2011 ஐபிஎல் போட்டியில் புனே வாரியர்ஸ் இந்தியா மற்றும் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா ஆகிய இரண்டு புதிய அணிகளைக் கொண்டிருந்த பதிப்பில் பயன்படுத்தப்பட்ட முறை ஆகும். ஐபிஎல் 2022 மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி மே 29 ஆம் தேதி முடிவடையும் என்றும், மும்பை மற்றும் புனேவில் உள்ள நான்கு மைதானங்களில் 70 லீக் போட்டிகள் நடைபெற உள்ளதாகவும் பிசிசிஐ உறுதிப்படுத்தியது. ஒவ்வொரு அணியும் வான்கடே மைதானம் மற்றும் DY பாட்டீல் மைதானத்தில் தலா 4 போட்டிகளிலும், புனேவில் உள்ள பிரபோர்ன் ஸ்டேடியம் (CCI) மற்றும் MCA சர்வதேச மைதானத்தில் தலா 3 போட்டிகளிலும் விளையாடும். இந்தியன் பிரீமியர் லீக்கின் 15வது பதிப்பு, கோவிட்-19 தொற்று பரவுவதற்கான பெரும் அச்சுறுத்தலாகக் கருதப்படும் விமானப் பயணத்தைத் தவிர்க்க, இவ்வாறு போட்டிகள் நடத்தப்படுவதாக பிசிசிஐ விளக்கியது.
போட்டிகள் நடைபெறும் இடம்
மும்பை - வான்கடே மைதானம் 20 போட்டிகள்
மும்பை - பிரபோர்ன் ஸ்டேடியம் (சிசிஐ) 15 போட்டிகள்
மும்பை - DY பாட்டீல் ஸ்டேடியம் 20 போட்டிகள்
புனே - எம்சிஏ சர்வதேச மைதானத்தில் 15 போட்டிகள்
மேலும் படிக்க | ஐபிஎல் 2022 தொடங்கும் தேதி அறிவிப்பு - ரசிகர்களுக்கு அனுமதி?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR