நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக ஐபிஎல் சீசனின் தொடக்க இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்தது. ஐபிஎல் 2022-ன் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் பெரும் தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.  டார்கெட் ஆகா 210 ரன்கள் அடித்தும் சிஎஸ்கே பவுலிங்கில் சொதப்பியதால் தோல்வி அடைந்தது.  குயின்டன் டி காக் மற்றும் எவின் லூயிஸ் ஆகியோரின் அரைசதங்களால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இந்த போட்டியில் எளிதாக வெற்றி பெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



மேலும் படிக்க | லக்னோ அணியை வீழ்த்த CSK அணிக்குள் என்டிரியாகும் புதிய வீரர் - தோனியின் மாஸ் பிளான்


ராபின் உத்தப்பா மற்றும் மொயின் அலி ஆகியோர் டாப் ஆர்டரில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டாலும், மறுபுறம், எம்எஸ் தோனி தனது விண்டேஜ் ஃபினிஷிங் டச்களை மீண்டும் கொடுத்தார். எவ்வாறாயினும், நான்கு முறை வெற்றி பெற்ற அணிக்கு இப்போது பெரும் கவலையாக இருப்பது அவர்களின் பந்துவீச்சு.  சி.எஸ்.கே அணியின் முக்கிய பவுலர் தீபக் சாஹர் காயத்தில் இருப்பதால் அணிக்கு பின்னடைவாக உள்ளது.  முக்கிய கட்டத்தில் பந்து வீச சரியான பவுலர் இல்லாமல் திணறி வருகிறது.  


 



இதற்கிடையில், போட்டி முடிந்த பிறகு, முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸின் சுரேஷ் ரெய்னா தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு ட்வீட் செய்தார்.  அவரது ட்வீட்டில், சுரேஷ் ரெய்னா தனது படத்தை பகிர்ந்து "ஒவ்வொரு சூழ்நிலையிலும் நல்லதைப் பார்க்க உங்கள் மனதைப் பயிற்றுவிக்கவும்" என்று பதிவிட்டு இருந்தார்.  மற்றொரு ட்வீட்டில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி பற்றிய தனது எண்ணங்களையும் ரெய்னா பகிர்ந்து கொண்டார். அதில் ரெய்னா இரு அணிகளின் செயல்பாடுகளையும் பாராட்டினார். “இரு அணிகளுக்கும் சிறப்பான ஆட்டம். கிரிக்கெட்டில் இன்னொரு நாள் நமக்கு கற்றுத் தந்த விளையாட்டு எவ்வளவு தீவிரமானதாக இருந்தாலும், புன்னகையுடன் கடினமாக உழைக்க வேண்டும். நம்பமுடியாத வெற்றிக்கு LSG வாழ்த்துக்கள்″ என்று கூறி இருந்தார். 


 



மேலும் படிக்க | கொல்கத்தா அணியை அலறவிட்ட ஆர்சிபி அணியின் இளம் வீரர் ஷபாஸ் அகமது யார்?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR