ஐபிஎல் 2022ன் தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று சென்னையும் ராஜஸ்தான் அணிகளும் விளையாடுகின்றன.  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு ஐபிஎல் பிளே ஆப்பில் இருந்து வெளியேறி உள்ளது.  நடப்பு சாம்பியன் ஆனா சென்னை அணி இந்த வருடம் மோசமான ஆட்டத்தினால் இந்த நிலையை சந்தித்து உள்ளது.  முக்கிய வீரர்களை ஏலத்தில் எடுக்க தவறியதால் முக்கிய ஆட்டங்களை  தவறவிட்டது. சென்னை அணியில் இருந்து தற்போது பெங்களூரு அணியில் விளையாடி வரும் பாப் டு பிளசி, ஹேசல்வுட் போன்ற வீரர்கள் தற்போது சிறப்பாக விளையாடி வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | தனது கடைசி ஐபிஎல் போட்டியில் விளையாடும் தோனி?


இன்னும் சில லீக் ஆட்டங்கள் மட்டுமே உள்ள நிலையில் இரண்டு அணிகள் மட்டுமே பிளே ஆப்பிற்கு தகுதி பெற்றுள்ளன.  புதிய அணிகளாக ஐபிஎல்-ல் வந்த குஜராத் மற்றும் லக்னோ அணிகள் பிளே ஆப்பிற்கு முதல் இரண்டு அணிகளாக தகுதி பெற்றுள்ளன.  அடுத்த இரண்டு இடங்களுக்கு 6 அணிகள் போட்டி போட்டு வந்த நிலையில் நேற்று நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு வெற்றி பெற்றதால் பஞ்சாப், கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் பிளே ஆப் போட்டியில் இருந்து வெளியேறி உள்ளது.  



தற்போது மூன்று மற்றும் நான்காவது இடங்களுக்கு ராஜஸ்தான், பெங்களூரு, டெல்லி அணிகள் கடும் போட்டி போட்டு வருகின்றனர்.  இன்று சென்னைக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடிக்கும்.  அதே சமயம் பெங்களூரு அணி பிளே ஆப்பிற்கு தகுதி பெற நாளை நடைபெற உள்ள மும்பை மற்றும் டெல்லி போட்டியில், டெல்லி அணி தோற்க வேண்டும் அல்லது இன்றைய போட்டியில் சென்னை அணி ராஜஸ்தானை 150 ரன்கள் வித்தியாசத்தில் அல்லது 2.3 ஓவரில் டார்கெட்டை அடிக்க வேண்டும்.  இது நடந்தால் பெங்களூரு அணி எளிதாக பிளே ஆப்பிற்கு தகுதி பெறலாம்.


மேலும் படிக்க | மலைக்க வைக்கும் ஐபிஎல் இறுதிப்போட்டி டிக்கெட் விலை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR