மலைக்க வைக்கும் ஐபிஎல் இறுதிப்போட்டி டிக்கெட் விலை

ஐபிஎல் இறுதிப்போட்டியின் டிக்கெட் விலை விவரம் இப்போது வெளியாகியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : May 20, 2022, 01:08 PM IST
  • ஐபிஎல் டிக்கெட் விலை விவரம்
  • குறைந்தபட்ச விலை ரூ.800
  • அதிகபட்ச விலை ரூ.65,000
மலைக்க வைக்கும் ஐபிஎல் இறுதிப்போட்டி டிக்கெட் விலை  title=

ஐபிஎல் 2022 தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் ஏற்கனவே ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில், எஞ்சிய 2 இடங்களுக்கு கடும் போட்டி நிலவுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என 3 அணிகள் வரிசை கட்டி நிற்கின்றன. இந்த 3 அணிகளில் ஏதேனும் 2 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும்.

மேலும் படிக்க | அந்தரத்தில் பறந்த பேட் - ஷாக்கான ஹர்த்திக் பாண்டியா மனைவி

பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் அணிகள் குவாலிஃபையர் போட்டிகளில் விளையாட இருக்கின்றன. இறுதிப்போட்டி மே 29 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இறுதிப்போட்டிக்கு முன்னதாக சுமார் 40 நிமிடங்கள் கலைநிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. இதில் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ரன்வீர் சிங் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். 

இந்நிலையில், இறுதிப்போட்டிக்கான டிக்கெட் விவரம் வெளியாகியுள்ளது. ஆரம்ப விலையாக 800 ரூபாய் முதல் 65 ஆயிரம் ரூபாய் வரை டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 800 ரூபாய்க்கு அடுத்தபடியாக 1,500, 2,000, 2,500, 3,500 மற்றும் 4,500 என்ற விலையில் டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக 7,500, 14,000, 20,000 மற்றும் 50,000 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. இறுதிப்போட்டியைக் நாட்டின் முக்கியமான பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கபட்டுள்ளது.

மேலும் படிக்க | Virat Kholi: ஒத்த ஆட்டம் 2 அணிகளை காலி செய்த கோலி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News