மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை ஐபிஎல் சாம்பியனாக இருந்தாலும், இந்த ஐபிஎல் தொடரில் முதல் வெற்றிக்கு போராடிக் கொண்டிருக்கின்றனர். கடந்த ஐபிஎல் போட்டி வரை பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்பட்ட இந்த அணி, நடப்பு தொடரில் மிக மோசமாக விளையாடிக் கொண்டிருக்கிறது. இந்திய அணியின் கேப்டனாக அண்மையில் பொறுப்பேற்ற ரோகித் சர்மா தான் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நீண்ட காலமாக கேப்டனாக இருந்து வருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மிகுந்த அனுபவசாலியான அவர், இந்த தொடரில் அணியை முன்னெடுத்து செல்வதில் தடுமாறி வருகிறார். அவரும், அணி நிர்வாகமும் செய்த சில தவறுகள் தான் மும்பை அணி வெற்றிப் பாதைக்கு திரும்ப முடியாமல் தவிக்கிறது. மும்பை அணியின் சரிவு எங்கே தொடங்குகிறது என கேட்டால், ஐபிஎல் ஏலத்தில் இருந்தே தொடங்கிவிட்டது எனலாம்.


மேலும் படிக்க | சிஎஸ்கே வீரருக்கு திருமணம் - வேட்டி சட்டையுடன் கொண்டாடிய தோனி


மும்பை அணியின் நட்சத்திரங்களாக ஹர்திக் பாண்டியா, குருணால் பாண்டியா, டிரென்ட் போல்ட் ஆகியோர் இருந்தனர். அவர்களை அணியில் தக்க வைக்க மும்பை அணி தவறிவிட்டது. ஏலத்தில் அவர்களை ஏலம் எடுக்க ஆர்வம் காட்டாமல், இளம் வீரர்களை ஏலம் எடுப்பதில் ஆர்வம் காட்டியது. கடந்த காலங்களில் வெற்றிக்கு உதவிய வீரர்களை ஏலத்தில் எடுக்காமல் மும்பை அணி அமைதி காத்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. பாண்டியாவை ஏற்கனவே குஜராத் அணி கேப்டனாக நியமித்துவிட்டதால், அவரை தவிர்த்து போல்ட் உள்ளிட்ட மற்ற வீரர்களை அணிக்குள் கொண்டு வர முயற்சி செய்திருக்கலாம்.  



ஜோப்ரா ஆர்சர் இந்த ஆண்டு ஐபிஎல் விளையாடமாட்டார் என தெரிந்தும் அவரை அதிக விலைக்கு ஏலம் எடுத்தது. அதேநேரத்தில் குயின்டன் டிகாக்,  குருணால் பாண்டியாவை ஏலம் எடுக்க மும்பை ஆர்வம் காட்டாத நிலையில், அவர்கள் மற்ற அணிகளுக்கு சென்று சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இந்த தொடரில் கேப்டன் ரோகித் இதுவரை எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. ஃபார்மில் இல்லாமல் இருக்கும் அவர், எப்போது பார்முக்கு வரப்போகிறார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஏலம் எடுப்பதில் குழப்பம், வீரர்களை தக்க வைப்பதில் தவறு, கேப்டன் ரோகித்சர்மா பார்மில் இல்லாமல் இருப்பது ஆகியவை மும்பை அணியின் மூன்று மிகப்பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. 


மேலும் படிக்க | கொரோனா தொற்று காரணமாக ஐபிஎல் போட்டிகள் இடமாற்றம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR